வைத்தியர் ஷாபிக்குப் பிணை!

Published By: Vishnu

25 Jul, 2019 | 07:32 PM
image

சொத்துக்குவிப்பு மற்றும் கருத்தடை செய்தமை போன்ற போலியான இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த மேதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சுமார் 2 மாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிரேஷ்ட வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபி இன்றைய தினம் 2,50000 ரூபா ரொக்க பிணையிலும் 2.5 மில்லியன் ரூபாவுடைய 4 சரீர பிணையிலும் சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் குருணாகல் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை குருணாகல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து  வைத்தியர்  ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

இதேவேளை வைத்தியர் ஷாபியின் வழக்கு விசாரணைக்கு முன்னதாக குருணாகல் மக்களினால் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று (25) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10