கழிவு கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தல்

Published By: R. Kalaichelvan

25 Jul, 2019 | 08:41 PM
image

(நா.தினுஷா) 

நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ஹேலீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 130 கழிவு கொள்கலன்கள் தொடர்பாக உடனடி விசாரணை ஆரம்பிக்குமாறும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 111 கழிவு கொள்கலன்களை மீண்டும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஆலோசனை வழங்கியுள்ளது. 

அத்துடன் இந்த கொள்கலன்களுக்கு எதிராக இரண்டுவாரத்தக்குள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த மேற்பார்வைக் குழவின் தலைவர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். 

இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்று அலரிமாளிகையில் ஏற்பாடு செயப்பட்டிருந்த ஊடகவியலாளர்  சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.

வெளிநாட்டு கழிவுகள் கொள்கலன்கள் விவகாரம்  தொடர்பில்  கடந்த புதன் கிழமை  பொருளாதார  அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆராய்ந்தது.

குழுவின் தலைவர் ஹர்ஷன ராஜகருணா தலைமையில்  இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் , வெளிநாட்டு வர்த்தக அமைச்சின் அதிகாரிகள்  மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.  ஹேலீஸ் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்குப்பற்றினர். 

இக் கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த ஹர்ஷன ராஜகருணா,

மேற்படி கொள்கலன்கள் குறித்து பொருளாதார  அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைகுழு நடத்திய கலந்துரையாடல்களில் சுங்கப் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியன மூன்றும் இவற்றை கழிவுப்பொருட்கள் என்றே தெரிவிக்கிறார்கள். 

இதேவேளை இன்னுமொருசிலர் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின்  காரணமாகவே இந்த கழிவுப் பொருட்கள்  எமது நாட்டுக்குள் வந்துள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.  ஆனால்  இந்த கழிவு  கொள்கலன்கள்  இங்கிலாந்தில்  இருந்து  கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஹேலீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 130 கழிவு கொள்கலன்களே தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த கழிவுகள்  மீள் ஏற்றுமதி செய்யப்பட வில்லை. இந்த கழிவுகள்  இங்கு கொண்டுவரப்பட்டு ஒன்றரை வருடகாலமாக முதலீட்டு சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இந்த கழிவுகளை மீள் ஏற்றுமதி செய்யுமாறும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்குமகாறும் முதலீட்டு சபைக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். அவ்வாறே சுங்கத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றில் குறைப்பாடுகளும் காணப்படுகின்றன. 

2017 ஆம் ஆண்டில் இருந்து இந்த கழிவுகள் நாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.அவ்வாறானால் மீண்டும் இவ்வாறான கழிவுகள் நாட்டுக்குள் வராமல் தடுப்பதற்கான பொறுப்பு  இந்த மூன்று நிறுவனங்களுக்கும் உள்ளது. 

111 கழிவு கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளன. இந்த கொள்கலன்களில் கழிவுகள் இருப்பதாக இந்த நிறுவனங்கள் அறிவித்தள்ளன. ஆகவே துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டள்ள இந்த கொள்கலன்களை மீண்டும் அந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02