2016 ஆம் ஆண்டுசட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அரசை தெறிக்க விடுவோம் என தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

தூத்துக்குடிமாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில் விஜய் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் தேவையில்லாத இடையூறுகளும் சச்சரவுகளும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது.

இருந்தாலும் விஜய் ரசிகர்களான நாம் இந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு நெருக்கடி கொடுத்தவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இதனால் வரும் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தி.மு.க .கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ரசிகர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்றுவோம்.

2016 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற அயராது பாடுபடுவோம்.

தேர்தலில் அ.தி.மு.க.வை தெறிக்க விடுவோம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.