வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Priyatharshan

25 Jul, 2019 | 03:48 PM
image

(ஆர்.விதுஷா)

வாய்ப் புற்றுநோயின்  காரணமாக  மரணிப்பவர்களின்  எண்ணிக்கை  கடுமையாக  அதிகரித்து  இருப்பதாகவும் . அதன் தாக்கத்திற்கு  உள்ளானோர்  நாளொன்றிற்கு  குறைந்தது  ஆறு  பேர்  வரையில்  அடையாளம்  காணப்படுவதாகவும்  தேசிய  புற்றுநோய்  தடுப்பு  வேலைத்திட்டத்தின்    சமூகப்பிரிவின்  ஆலோசகர்  டாக்கடர்  சுராஜ்  பெரேரா   தெரிவித்தார். 

தலை , கழுத்து  புற்றுநோய் சர்வதேச  தினம்  நாளை  சனிக்கிழமை   அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு   வாய்ப்புற்று  நோயின்  அபாய  தன்மை  தொடர்பில்  விளக்கமளிப்பதற்காக  அரசாங்க  தகவல்  திணைக்களத்தில்   இன்று வியாழக்கிழமை   ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த   ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்து  கொண்ட  டாக்டர் சுராஜ் பெரேரா  வாய்ப்புற்றுநோயினால்   அதிகளவில்  பாதிக்கப்படுவது  ஆண்களாகவே   இருப்பதாகவும் அதற்கு  காரணம் வெற்றிலை, பாக்கு  பாவனையே  என்றும்  குறிப்பிட்டார்.  

தேசிய  புற்றுநோய்  தடுப்பு  வேலைத்திட்டத்தை  சேர்ந்த  சிரேஷ்ட  வைத்திய  நிபுணர்களும் கலந்து கொண்ட இந்த ஊடகவியலாளர்   சந்திப்பில்  அவர்  மேலும்  கூறியதாவது ,  

எதிர்வரும்  சனிக்கிழமை தலை கழுத்து சர்வதேச   தினம்  அனுஷ்டிப்பதற்கு  உலக  நாடு பூராகவும்  நடவடிக்கை  எடுக்கப்பட்டுவருகின்றது.  கடந்த 25  வருடங்களில்  புற்றுநோயின் தாக்கம்   மக்கள்  மத்தியில்  அதிகரித்த  மட்டடத்தில்  காணப்பட்டுள்ளது. 

அண்மைகாலமாக  வாய்ப்புற்றுநோயின் பாதிப்பு   கடுமையாளதாக  இருக்கின்றது.  மதுபானம்  ,  புகையிலை ஆகியவற்றுடன்  சேர்ந்த வெற்றிலை, பாக்கு  பாவனை யே  வாய்ப்புற்று நோயின்  கடுமையான  தாக்கத்திற்கு  பிரதான  காரணமாகும். ஆண்கள்  மத்தியிலேயே வாய்ப்புற்று  நோய்  அதிக  அளவில்  காணப்படுகின்றது.    

2013 ஆம் ஆண்டில் புற்றுநோயின் காரணமாக இலங்கையில் 13000  பேர் வரையில்  மரணமடைந்தனர்.  அவர்களில் 1152  பேர்  வரையில்  வாய்ப்புற்றுநோயின் காரணமாக  உயிரிழந்துள்ளனர். அவர்களில்  863   ஆண்களும்  ,   289  பெண்களும்  உள்ளடங்குகின்றனர்.  

கடந்த  வருடத்தில் மாத்திரம் 29843  பேர்  புற்று  நோய் தாக்கத்திற்கு  உள்ளாகியள்ளனர்.  வாய்ப்புற்றுநோய் ஏற்படும் உடனடியாக பட்டசத்தில்  வைத்தியர்களை  நாடவேண்டியது அவசியமாகும்.   அவ்வாறு  ஆரம்ப  கட்டத்திலேயே  மருத்துவ  உதவியை  நாடும்  பட்சத்தில்   அந்த  நோயை  தவிர்க்கக்கூடிய  வாய்ப்புக்கள்  அதிகளவில் காணப்டுகின்றன. அந்த வகையில் 2030  ஆம் ஆண்டாகும்  போது புற்றுநோய் நிலைமையை  3.4  வீதத்தால்  குறைப்பதற்கு  எதிர்பார்க்ககப்பட்டுள்ளது.  

டாக்டர் பிரசன்ன  ஜெயலத்  கூறுகையில்  ,    

வாய்ப்புற்றுநோயை  ஆரம்பத்திலேயே  கட்டுப்படுத்துவது  அவசியமானது.    இருப்பினும் புற்றுநோய் ஏற்படும்  முதல்  மட்டத்திலேயே  அதனை  தடுப்பதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  பொதுமக்கள்  காட்டும்  ஆர்வம் மிகவும்  குறைவு  .அதன்  காரணமாக  உயிரிழப்புக்கள் அதிகளவில்  ஏற்படுகின்றது. புற்று  நோய்  தொற்று  ஏற்பட்ட  முதல் இரண்டு நிலைகளில்  மருத்துவ  சிகிச்சைக்காக   வைத்தியர்களை  நாடுவோர்கள்  24  வீதமானோராகவும், புற்றுநோய் நிலைமை  அதிகரித்த  பின்னர்  அதனை  கட்டுப்படுத்த இயலாத தறுவாயில் வைத்தியர்களை  நாடுவோர்  76  வீதமானோராகவும்  காணப்படுகின்றனர்.  ஆகவே ,  மக்கள்  இது  தொடர்பில் கவனம் செலுத்த  வேண்டியது அவசியமாகும்.

தற்போது பாடசாலை  மாணவர்களின்  மத்தியிலும்   புற்று நோய்  ஏற்படுவதற்கான  ஆபத்து ஏற்பட்டுள்ளது.  ஆகவே ,  அதனை  தடுப்பதற்கான  நடவடிக்கைகளை  பாடசாலை மட்டத்தில்  மேற்கொண்டுள்ளோம்.  வெற்றிலை  பாவனையின்  காணமாக  அதிகளவில்  இந்த  புற்று  நோய்  ஏற்படுகின்றமையின் காரணமாக  அரசாங்க  நிறுவனங்களில் புகையிலை , வெற்றிலை  போன்றவற்றை  விற்பனை  செய்வாதற்கு  எதிரான  நடவடிக்கைகளை   சுகாதார அமைச்சு  மேற்கொண்டுள்ளது. மேலும் ,    வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும்  பாவா  ,  பான்பராக்  போன்ற  பாக்கு  வகைகளை  நாட்டினுள்  விநியோகிப்பதனை  அரசாங்கம் தடை  செய்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29