பீட்சா பிரியரா நீங்கள் ! வாய்பிளக்க வைக்கும் பீட்சா திருமணம்

Published By: Digital Desk 3

25 Jul, 2019 | 12:48 PM
image

சிக்காகோவைச் சேர்ந்த சிக்காகோ டவுன் பீட்சா நிறுவனம் பீட்சாவை கருப்பொருளாக வைத்து ’பீட்சா பிரைடல் பேக்கேஜ்’ (Pizza Bridal Package) என்ற போட்டியை உலக அளவில் முதல் முறையாக  அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த நிறுவனம் திருமணமாகப்போகும் ஜோடிகளைப் போட்டியில் பங்கேற்கச் செய்து அதில் வெற்றி பெரும் ஜோடிக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறது. பீட்சாவை கருப்பொருளாக கொண்டு திருமணப்பெண் அணியும் ஆடை , கேக் மற்றும் உணவு என எல்லாமே அமைந்திருக்கும்.

இதை அறிவித்த நொடியில், பீட்சா மீது  காதல் கொண்டோர் பலரும் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற முதல் ஜோடிக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. அதில் திருமணப் பெண்ணின் ஆடை முற்றிலும் பீட்சா தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கான கேக்காக மூன்று அடுக்கு பீட்சா கேக் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் திருமணத்திற்கு வரும் உறவினர்களுக்கும் திருமண விருந்து பீட்சாதான். அந்த திருமண அறையும் முற்றிலும் பீட்சாவை கருப்பொருளாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமன்றி திருமணமான ஜோடிக்கு பீட்சாவில் பூங்கொத்து , ஹனிமூன் பேக்கேஜ் என்பன வழங்கப்படுகிறது. சிக்காக்கோ அல்லாது ஏனைய மாநிலங்கள்  வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹனிமூனை சிக்காக்கோவில் கழிக்க ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

பீட்சா தோற்றத்தில் ஆடை என்கிற யோசனை லண்டனைச் சேர்ந்த பாடகி ரிஹனாவின் மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மஞ்சள் நிற ஆடை அணிந்துவந்தார். அதன் தரை தொடும் டிசைன் பீட்சா வட்டம் போல் உள்ளது என்று கூறப்பட்டது.

இந்த ஆடைதான், அவர்களுக்கு பீட்சா தோற்றத்தில் ஆடை என்கிற யோசனையை உதிக்கச் செய்தது என்று இதன் முகாமையாளர் ரேச்சல் கூறியுள்ளார்.

தற்போது இந்த பிரைடல் பீட்சா பேக்கேஜ்  வெளிநாட்டினரிடையே பிரபலமாகி வருகிறது. பலரும் முந்திக் கொண்டு இந்த ஜோடி போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right