ஈரான் - அமெரிக்கா விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் வலியுறுத்தல்

Published By: R. Kalaichelvan

25 Jul, 2019 | 10:13 AM
image

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மிகவும் அவதானமாக செயல்பட வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலிறுத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவின் அமைதிக்கான நிறுவனத்துக்கு சமூகமளித்திருந்தார், இதன் பின்னர் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா , ஈரான் தொடர்பில் தமக்கு மிகுந்த கவலை உள்ளதாவும் , ஈரானுடன் போர் ஏற்பட்டால் அதன் பின் ஏற்படும் விளைவுகளை பற்றி அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு இரு தரப்பு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் பாகிஸ்தானின் பங்கு இருக்குமாயின் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம் என ஈரானிடம் ஏற்கனவே அழுத்தமாக சொல்லியிருக்கிறோம் என்றார். 

கடந்த சில காலத்துக்கு முன்பு வரை ஈரான் அதற்கு தயாராக இருந்தது. ஆனால் தற்போது ஈரான்  மிகுந்த அவநம்பிக்கை அடைந்திருப்பதாக நான் உணர்கிறேன், இது போருக்கு வழிவகுக்கும் என்றார்.

அத்தோடு ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் நாங்கள் ஒருபோதும் தலையிடமாட்டோம். அவர்களுக்கு  என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிலையில் தாம் அமைதியை விரும்புவதாகவும் ,போர் என்ற ஒன்றை தாம் நிராகரிப்பதாவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52