"மாணவர் ஆலோசனைக்காக ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்"

Published By: R. Kalaichelvan

24 Jul, 2019 | 05:09 PM
image

மாணவர் ஆலோசனையை பாடசாலை மட்டத்தில் செயற்திறனுடன் முன்னெடுத்து செல்வதற்கான காலத்தின் தேவையை அறிந்து அதற்காக கல்வி கட்டமைப்பில் விசேட தகைமையுடன் கூடிய பட்டதாரிகளில் புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு தேவையான ஒழுங்கு விதிகளை செய்யுமாறு  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  ,கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் , கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் திகதியன்று அதற்கான போட்டி பரீட்சை நடத்தப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் பிரகாரம் , ஆசிரியர் சேவையின் 3-1 (அ) வகுப்புக்காக மாணவர் ஆலோசனைக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைவாக குறித்த ஆசிரியர் இணைப்பு இடம்பெறவுள்ளது.

எனினும் மாகாண பாடசாலைகளுக்கான மாணவர் ஆலோசனை  ஆசிரியர் நியமனத்திற்கு சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மாத்திரமே உடன்ப்பட்டுள்ளன. 

இதன்பிரகாரம்  தேசிய பாடசாலைகளில் 232  வெற்றிடங்களும் (சிங்கள மொழி-184 மற்றும் தமிழ் மொழி-48) வட மேல் மாகாண பாடசாலைகளில்341 வெற்றிடங்களும் (சிங்கள மொழி- 274 மற்றும் தமிழ் மொழி-67) சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் 235 வெற்றிடங்களும் (சிங்கள மொழி- 182 மற்றும் தமிழ் மொழி-53)உள்ளன. குறித்த வெற்றிடங்களுக்காக மாணவர் ஆலோசனை ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் குறித்த நியமனத்திற்கான  நேர்முக பரீட்சை 2019-05-31 முதல் 2019-06-10 ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடத்தப்பட்டது. எழுத்து மூல பரீட்சை மற்றும் செயற்பாட்டு பரீட்சையில் சித்தி பெற்ற விண்ணப்பதாரிகளில் எடுத்துக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் திறமைகள் உடையோர் குறித்த நியமனத்திற்காக இணைத்துக்கொள்ளப்படுவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08