லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் !

Published By: Daya

24 Jul, 2019 | 04:31 PM
image

உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு அந் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டனிலும் நாளையதினம் வெப்பநிலை 100 பாகை பர்னைட் ஆக அதிகரிக்குமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகூடிய வெப்பமானது  102 பாகை பர்னைட் ஆக பதிவாகியுள்ளது. 

இதனை முறியடிக்கும் வகையில் அதிகரித்துவரும் லண்டனின் வெப்பநிலை நாளை 100 பாகை பர்னைட்டை (38 C) எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இது இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் பதிவான 98.1 பாகை பர்னைட் (36.7 C) முறியடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் பட்சத்தில்  101.F (38.5C) என்ற இங்கிலாந்தின் வெப்பநிலை சாதனையும் முறியடிக்கப்படலாம் என இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

லண்டனில் நிலவும் வெப்பசூழல் காரணமாக இதுவரை கொட்வோல்ட் நீர்பூங்காவில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மூவர் காணமல்போய்யுள்ளதுடன் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பத்தை தணிக்க குழுமியுள்ளனர். அத்துடன் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அரைக்காற்சட்டையுடன் பணிக்கு செல்வதை அவதானிக்கக்கூடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் அதிகூடிய வெப்பநிலையானது 114.8.C ஆக பிரான்ஸில் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17