50 ரூபா விவகாரம்; அமைச்சர் நவீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Published By: Daya

24 Jul, 2019 | 04:44 PM
image

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பத்துடன் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று புதன் கிழமை  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

ஹட்டன் நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பிற்பகல் 3 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்தில்  தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்,பொது மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டிருந்தனர்.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, 50 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.


ஆனால் குறித்த விடயத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.


இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்றது.


இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37