ரவியின் அமைச்சரவை பத்திரத்திற்கு மங்கள கடும் எதிர்ப்பு...

Published By: Vishnu

24 Jul, 2019 | 01:40 PM
image

மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சை இடமாற்றம் செய்வதற்கு திறைசேரியிடமிருந்து 364 மில்லியன் ரூபாவை பெற்றுத் தருமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். 

இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ரவி கருநாணாயக்க இந்த விடயத்தை அமைச்சின் கவனத்திற்கொண்டு வந்தபோதும் மங்கள சமரவீர அதன்போதும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். 

இந் நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்படி அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார்.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் தற்போது கொழும்பு, ஆனந்த குமாரசாமி மாவத்தையில் அமைந்துள்ள மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சை கொழும்பு, நவம் மாவத்தைக்கு இடமாற்றுவதற்காகவே அவர் திறைசேரியிடமிருந்து 364 மில்லியன் ரூபாவை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 

அத்துடன் தற்பேதைய அமைச்சின் கட்டடத்தில் போதியளவு இடவசதி இல்லாமையின் காரணமாகவே அமைச்சை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறித்த அசை்சரவைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40