மனோவால் முடியுமென்றால்  ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி

Published By: Digital Desk 4

24 Jul, 2019 | 12:30 PM
image

அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. 

ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. மேலும், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள். என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்.

கட்சி அலுவத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,

இப்பொழுது உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அரசியல் கைதிகளை மனோ கணேசன் சென்று பார்த்து வாக்குறுதியளித்து அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருக்கின்றார். ஏனென்றால் இப்பொழுது மனோ கணசேனைத்தான் அனுப்ப வேண்டிய கட்டாய சூழலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தாங்கள் போகமுடியாது.

இவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் அரசியல் கைதிகளுக்கு இவ்வாறான  வாக்குறுதிகள் கொடுத்து கொடுத்து ஏமாற்றியது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆகையால் அரசியல் கைதிகளுக்கு மீண்டும்மொருமுறை அவர்கள் போய் பொய் வாக்குறுதிகளை அளிக்க முடியாது என்பதால் தாங்கள் ஒளிந்துகொண்டு மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள்

ஆனால் மனோ கணேசன் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார். மனோ கணேசனால் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போதும் கூட அந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்காலாம், ஆனால் எந்தவொரு நடவடிக்கையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. இப்பொழுது அதைப்பற்றி தெரியாதது போல, அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதே தாங்கள் அறியாதது போல மறந்து விட்டதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் தாங்கள் போக முடியாத இடத்திற்கு, இப்பொழுது அந்தக் குற்றச்சாட்டை மனோ கணேசன் மீது திருப்பி விடுதற்காக மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும். 

இந்த நிலையில், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் எனத் தானங்கள் நாங்கள் கருதிகொள்ள வேண்டியதாக இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44