துறை­முக நக­ரத்தை நிறுத்­து­வ­தாகக் கூறிய அரசு தற்­போது மேலும் விஸ்­த­ரித்­துள்­ளது - விமல்

Published By: Priyatharshan

24 Jul, 2019 | 10:31 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

துறை­முக நகர திட்­டத்தை நிறுத்­து­வ­தாக தெரி­வித்து ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் தற்­போது அதற்­கான இடத்தை மேலும் அதி­க­ரித்து வழங்­கி­யுள்­ளது. என்­றாலும் நாட்­டுக்கு பொரு­ளா­தா­ரத்தை ஈட்­டிக்­கொ­டுக்கும் மத்­திய நிலை­ய­மாக மாற்­றி­ய­மைக்­கவே இதனை நாங்கள் அன்று ஆரம்­பித்தோம். எமது அர­சாங்கம் இருந்­தி­ருந்தால் துறை­முக நக­ரத்­திட்ட வேலைகள் முடிந்­தி­ருக்கும் என எதிர்க்­ கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் நிரு­வாக மாவட்­டங்கள் சட்­டத்தின் கீழ் மீதான பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

துறை­முக நக­ரத்­ திட்­டத்தை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் அன்று சீன அர­சாங்­கத்­துடன் ஒப்­பந்தம் செய்து ஆரம்­பித்­த­போது, எமக்கு பல்­வேறு விமர்­ச­னங்கள் தெரி­விக்­கப்­பட்­டன. சிவப்­புச்­சட்­டைக்­கா­ரர்­களும் விமர்­சித்­தனர். இவ்­வா­றான விமர்­ச­னங்கள் அனைத்தும் அர­சியல் குரோ­தத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். 

நாங்கள் ஆட்­சிக்கு வந்தால் துறை­முக நக­ரத்­திட்­டத்தை நிறுத்­து­வ­தாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க அன்று தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் இன்று அதனை ஆத­ரிப்­ப­வர்­க­ளுடன் இணைந்­து­ செ­யற்­ப­ட ­வேண்­டிய நிலை அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் மேலும் துறை­முக நக­ரத்­திட்­டத்­துக்கு  கூடு­த­லான இடம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனை நாங்கள் எதிர்க்­க­வில்லை. ஏனெனில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொ­டுக்கும் மத்­திய நிலை­ய­மாக ஏற்­ப­டுத்­து­வ­தற்கே எமது அர­சாங்கம் இதனை ஆரம்­பித்­தது.

என்­றாலும் சீனாவை விமர்­சித்து துறை­முக வேலைத்­திட்­டத்தை ஒரு ­மா­த ­கா­ல­மாக இடை­நி­றுத்­திய அர­சாங்கம், இறு­தியில் நஷ்­ட­ஈடும் வழங்­க­ வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அத்­துடன் நாங்கள் சீனா­வுக்கு அந்தக் காணி­களை உரித்­து­ரி­மை­யாக கொடுத்­த­தாகத் தெரி­வித்து இவர்கள் ஒப்­பந்­தத்தை மாற்­றிக்­கொண்டு 99 வரு­டங்க­ளுக்கு குத்­த­கைக்கு வழங்­கி­யுள்­ளனர். அத்­துடன் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும் 99 வரு­டங்க­ளுக்கு சீனா­வுக்கு வழங்­கி­யுள்­ளனர்.  இந்த ஒப்­பந்தம் மேலும் 99 வரு­டங்க­ளுக்கு  நீடிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

துறை­முக நக­ரத்­திட்டம் அமைக்­கப் ­ப­டு­வதால் சிங்­கப்பூர் மற்றும் டுபாய் நாடு­க­ளுக்கே சவா­லாக இருக்­கப்­ போ­கின்­றது. அந்த நாடு­களில் இருக்கும் முத­லீட்­டா­ளர்கள் இங்கு வரு­வார்கள். ஆசி­யாவின் பொரு­ளா­தார மத்­திய நிலை­ய­மா­கவே துறை­முக நக­ரத்­திட்டம் இருக்­கப்­ போ­கின்­றது. அதே­போன்று ஷங்­கி­ரில்லா ஹோட்­ட­லுக்கு காணியை உரித்­து­ரிமை வழங்­கி­ய­தாக குற்றம் சாட்­டு­கின்­றனர். ஷங்­கி­ரில்­லா­வுக்கு அந்தக் காணியை வழங்­கிய காலப் ­ப­கு­தி­யா­னது, நாட்டில் யுத்தம் நிறை­வ­டைந்த கால­மாகும். நாட்டில் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்ள பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிக்­க­ வேண்­டிய தேவை இருந்­த­தால்தான் இதனை அன்று செய்தோம்.

எனவே நாட்டுக்கு நன்மை தரக்கூடிய விடயங்களை அரசியல் குரோதத்துடன் பார்க்காமல் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்ப முடியும். இல்லாவிட்டால் அதன் பாதிப்பை எமது சந்ததியினரே அனுபவிக்க வேண்டி வரும். அதனால் எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தத் துறைமுக நகரத்திட்டம் இந்தளவுக்கு நிறைவடைந்திருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51