''நீண்டகாலம் இடம்பெயர்ந்த திட்டத்திற்குள் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவு உள்வாங்கப்படும்''

Published By: Daya

24 Jul, 2019 | 12:16 PM
image

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் நீண்டகால இடப்பெயர்வுத் திட்டத்திற்குள் இவ்வருடம் உள்வாங்கப்படுவார்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் உமாமகள் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் போன்ற கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர்.

இருப்பினும் இம்மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்தினுள் கடந்த 1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களான நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களே உள்வாங்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறு நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, இத் திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சின் அமைச்சரான, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், விசேடமான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கி.சிவலிங்கம் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இந் நிலையில் அதற்குப் பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மணிவண்ணன் உமாமகள், இவ்வருடம் குறித்த கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41