"ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த மாதம் அறிவிப்போம்"

Published By: R. Kalaichelvan

23 Jul, 2019 | 07:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிப்போம் .அடுத்த மாதத்தில் இருந்து ஜனாதிபதி வேட்பாளருடன் ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். மக்கள் எதிர்பார்க்கும் நபர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என  ஐக்கிய தேசிய கட்சி பிரதி அமைச்சர்  நலீன் பண்டார சபையில் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஆரோக்கியமான கொடுக்கல் வாங்கல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கொண்டுவரப்பட்ட நிருவாக மாவட்ட சட்டத்தில் திருத்தங்களை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில், 

ஐக்கிய தேசிய கட்சியின் பக்கமே சர்ச்சைகளும் , பிரச்சினைகளும் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். 

ஆனால்  எமது பக்கத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. நாங்கள் தமிழ் கூட்டமைப்பு , முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோம். நாங்கள் இவர்களுடன் சரியாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதினாலேயே 52 நாள் சூழ்ச்சியின் போது எங்களால் வெற்றிப் பெற முடியுமாக இருந்தது. 

எவ்வாறாயினும் எமது பக்கத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. கடந்த 4 வருடங்களில் நாங்கள் எல்லா கட்சிகளுடனும் பயணித்தது போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயணிப்போம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19