இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் குறித்து சபையில் ஜே.வி.பி. கேள்விக் கணை

Published By: Vishnu

23 Jul, 2019 | 03:24 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகளின் தொகை எவ்வளவு? எந்த நிறுவனம் இந்த குப்பைகளை கொண்டுவருகின்றது. கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகளின் எவ்வளவு குப்பைகள் மீளவும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது? கொழும்பு துறைமுகத்தில் எவ்வளவு தொகை கழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற காரணிகளை உடனடியாக பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

கழிவுப்பொருட்கள் அடங்கிய கொல்களைன்கள் 200 க்கு அதிகமானவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இவை பிரித்தானியாவில் இருந்து வந்துள்ளதாகவும், சரியாக 220 கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, இதில் 102 கொள்கலன்கள் சுங்க திணைக்களத்தினால் துறைமுகத்தில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கொள்கலன்களில் 120 க்கும் அண்ணளவான கொள்கலன்களை விடுவித்து  கட்டுநாயக  வர்த்தக வளைய  பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

இந்த கொள்கலன்கள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான காலங்கள் இவை கண்டறியப்படாது இருந்துள்ளது. அதேபோல் இதனை மீள் சுழற்சி செய்யாது வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் குறித்து அவதானம் இல்லாது கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இதுவரை காலம் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளின் தொகை எவ்வளவு? இதில் எவ்வளவு தொகையான கழிவுகள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது? என்பதை கூற வேண்டும். 

கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளில் ஒரு தொகை குப்பைகள் மிகவும் சூட்சமமாக நாட்டுக்குள் பரப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலான நிலைமைகள் உருவாகும். இது கடந்த 2013 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவே இதில் வழங்கப்பட்ட சுதந்திரத்திற்கு அமையவே இந்த கழிவு வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான சில நிறுவனங்கள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் இது குறித்து இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04