அமெரிக்க உளவாளிகளுக்கு ஈரானில் மரணதண்டனை : மறுக்கும் அமெரிக்கா

Published By: R. Kalaichelvan

23 Jul, 2019 | 03:13 PM
image

ஈரானில் உளவுபார்த்த அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சீ. ஐ. ஏ. யின் 17 பேரை கைது செய்துள்ளதாகவும் அதில் சிலருக்கு மரணதண்டனை விதித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஈரான் , அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணு  ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதன் பின் அமெரிக்கா ஈரானிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தது.

இந்நிலையில் ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தியது.

இரு நாடுகளுக்குமிடையே தற்பொழுது காணப்படும் பதற்றமான இச்சூழ்நிலை மற்றைய நாடுகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது.

அத்தோடு ஈரானுடனான உறவுகளை மற்றைய நாடுகள் முறித்துக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்துள்ள நிலையில் கடந்த மாதம் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் பெரும் போர் பதற்றம் உருவாகியது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானின் முக்கிய இடங்களை தாக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, குறித்த உத்தரவின் விளைவுகளை கருத்திற்கொண்டு பின்னர் ட்ரம்ப் இடைநிறுத்தினார்.

இந்நிலையிலேயே அமெரிக்காவின் சீ. ஐ. ஏ. உளவாளிகளை கைது ஈரான் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தக் கைது தொடர்பில் தெரியவருவதாவது, 

இந்நிலையில் குறித்த நபர்கள் ஈரான் இராணுவத்தின் மென்பொருள் சார்ந்த ரகசிய தகவல்கள் என்பனவற்றை அமெரிக்காவுக்கு திருடி கொடுத்துள்ள குற்றச்சாட்டில் இவர்களுக்கு மரணதன்டனை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவிக்கையில்,

ஈரான் பொய்களின் புகலிடம் எனவும் , அமெரிக்க உளவாளிகள் எவரும் ஈரானில் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33