கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் ஐ.தே.கவுக்கான ஆதரவு குறித்து தீர்மானிப்போம் - யோகேஸ்வரன்

Published By: Daya

23 Jul, 2019 | 02:23 PM
image

தமது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலையிருக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவேன் என சர்வதேச நாடு ஒன்றின் முன்னிலையில் எழுத்துமூல உறுதி மொழி வழங்குவாராயின் அவருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் மூன்றாம் இரண்டாம் குறுக்கு வீதிகளை கம்பிரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதற்கென கம்பிரலிய திட்டத்தின் கீழ் 40இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்த ஒதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஓதுக்கியுள்ளார்.

இதன் புனரமைப்பு பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,வட்டார உறுப்பினர் ரூபராஜ்,மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38