ஷாபி விவகாரத்தை காலம் கடத்துவது முஸ்லிம்கள் குறித்து வீண் சந்தேகங்களுக்கு  வழிவகுக்கும் : சம்பிக

Published By: R. Kalaichelvan

23 Jul, 2019 | 01:10 PM
image

(செ.தேன்மொழி)

பெண்ணின் கற்பப்பையை அகற்றுவது என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரம் அல்ல உலகில் வாழும் எந்தவொரு இனத்தையும் பாதிக்க கூடிய உணர்வுப்பூர்வமான விடயமாகுமென தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக ரணவக , வைத்தியர் ஷாபி விவகாரத்தை விசாரணை என்ற பேரில் காலம் கடத்துவது சிங்கள பௌத்தர்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் அந்த இனத்தை சார்ந்த வைத்தியர்கள் குறித்தும் சந்தேகங்களுக்கே வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

 

ஹெட்டிபொல - படுவஸ்நுவர வாராந்த சந்தை தொகுதி மற்றும் பல்நோக்கி கட்டட தொகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக ரணவக மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில் , 

வைத்தியர் ஷாபி தொடர்பான பிரச்சினைக்கு ஒரு வார காலத்தில் தீர்வை காண முடியும். நீதிமன்றத்திற்கு சென்று பல வருட காலமாக இழுத்தடிப்பு செய்ய வேண்டிய விடயமல்ல. இலங்மைக வைத்திய சபை மற்றும் அரசாங்கம் ஒன்றிணைந்து வைத்தியர் ஷாபி தொடர்பான பிரச்சினையை தீர்க்க முடியும். 

மேலும் சிங்கள மற்றும் தமிழ் வைத்தியர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திர சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை வைத்தியர் ஷாபியுடன் மீளாய்வு செய்தால் மிக எளிதாக ஒரு தீர்மானத்திற்கு வந்து விட முடியும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30