புதிய கல்விக்கொள்கைக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு

Published By: Daya

23 Jul, 2019 | 03:36 PM
image

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் தமிழ் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நாகர்கோயிலில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“பாரதிய ஜனதா அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் தேசிய நகல் கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் கல்வித்துறை சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், கல்வியை தனியார் மயமாக்கும் செயலை செய்திட மத்திய அரசு முயற்சி செய்கிறது. விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் அறிக்கையின்படி 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளை மூடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே தருணத்தில் மூன்று வயது முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகவே வாய்ப்பு ஏற்படும்.

தமிழகத்தில் தற்போது 50 சதவீத கல்வி நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளது. உயர்கல்வியில் 75% கல்வி நிறுவனங்கள் தனியார் கைகளில் இருக்கிறது. கல்வியை தனியார் மயமாக்குவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய கல்விக்கொள்கைக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப் படுவது வழக்கம். இவர் மீது இன்னும் வழக்கு தொடரப்பட வில்லை.

புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு பாடசாலைகளை மூடுவதை கைவிட்டு, அதனை மூடாமல் இருப்தற்கான நடவடிக்கையை அரசுமேற்கொள்ளவேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டால், இனி வரும் நாட்களில் கல்வித் துறை தொடர்பாக மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலை உருவாகும்.

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஒரு கோடி பேரிடம் கைசாத்து வாங்கவிருக்கிறோம் மேலும் தமிழகம் முழுவதும் 5,000 இடங்களில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறோம்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17