பாராளுமன்றில் உணவு, மின்சார செலவு வருடத்துக்கு எவ்வளவு தெரியுமா?

Published By: Vishnu

23 Jul, 2019 | 10:08 AM
image

வருடம் ஒன்றுக்கு பாராளுமன்றத்தில் உணவு மற்றும் குடிபான வகைகளுக்காக 120 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக பாராளுமன்ற நிதி அதிகாரிகள் குழுவினர் மதிப்பீடு செய்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்கின்றனர், இதில் 75 சதவீத உணவுச் செலவு பாராளுமன்ற ஊழியர்களுக்கான செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் உணவுகள் வீண் விரயமாவதை தடுப்பதற்காக பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் உணவு வகைகள் தயாரிப்பதை கணிசமாக குறைக்க வேண்டும் எனவும் பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பவர்களின் விபரங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் அதற்கேற்றால் போல் உணவு தயாரிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதேவேளை பாராளுமன்றத்தில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்துக்கு 80 மில்லியன் ரூபாவும், தொலைபேசி பாவனைகளுக்கு 14.5 மில்லின் ரூபாவும், குடிநீருக்காக 9 மில்லியன் ரூபாவும் செலவிடப்படுவதாக பாராளுமன்ற நிதி பிரிவுக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சார செலவுகளில் பெரும்பகுதி குளிரூட்டிக்காக (air-conditioning system) செலவுசெய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04