மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம்

Published By: Digital Desk 4

22 Jul, 2019 | 09:57 PM
image

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.

இன்று திங்கள் கிழமை  22 ஆம் திகதி சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்று பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜா சிவாசாரியார் பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன.

பல இடங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08