“மம்மி” வெளி­யிட்ட “டம்மி” அறிக்கை” என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து தி.மு.க. பொரு­ளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரி­வித்­துள்ளார்.

அருப்­புக்­கோட்டை தொகு­தியில் போட்­டி­யிடும் வேட்­பாளரை தி.மு.க. ஆத­ரித்து பிர­சாரம் மேற்­கொண்ட ஸ்டாலின் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

அ.தி.மு.க. தேர்தல் அறிக்­கையை ஜெய­ல­லிதா வெளி­யிட்­டதை நீங்கள் பார்த்து இருப்­பீர்கள். நமது தி.மு.க.வின் தேர்தல் அறிக்­கையை எடுத்து அதில் அவர்­க­ளு­டைய ஸ்டிக்­கரை ஒட்டி அந்த தேர்தல் அறிக்­கையை வெளி­யிட்டு இருக்­கி­றார்கள். காரணம் ஸ்டிக்கர் ஒட்­டு­வ­துதான் அவர்­க­ளுக்கு ரொம்ப பெருமை என்­ப­துதான் உண்­மையே தவிர வேறு இல்லை. அப்­படி நமது தேர்தல் அறிக்­கையில் ஸ்டிக்­கரை ஒட்டி வெளி­யிட்டு இருக்­கிறார்.

”என் கண்­ணுக்கு தெரிஞ்ச வரைக்கும் எதி­ரியே இல்லை”, என்றார் ஜெய­ல­லிதா. ஆனால் தி.மு.க.

தேர்தல் அறிக்­கையை கண்டு பயந்து போய் ஒரு மாதம் கழித்­துதான் அ.தி.மு.க. தேர்தல் அறிக்­கை­யினை வெளி­யி­டு­கிறார் என்றால், தி.மு.க.வை பார்த்து அவர் எந்­த­ள­வுக்கு பயந்து போயி­ருக்­கிறார் என்­பது தெரி­கின்­றதா இல்­லையா ? இப்­ப­டி­யொரு தேர்தல் அறிக்­கையை 25 நாட்­க­ளாக ஒரு தலைமைச் செய­லாளர், முக்­கி­ய­மான சில அதி­கா­ரிகள் உட்­கார்ந்து தயா­ரித்து இருக்­கி­றார்கள். யார் யார் என்ற பட்­டியல் எங்­க­ளிடம் இருக்­கி­றது. மொத்­த­மாக 19-ஆம் திக­திக்கு பிறகு அதை­யெல்லாம் நாங்கள் வைத்துக் கொள்­கிறோம். சரி இப்­படி தயா­ரிக்­கி­றார்­களே, நாம் வெளி­யிட்­டதை விட ஏதோ பெரி­தாக இருக்கும் என்று நினைத்தேன்.

தலைவர் கருணாநிதி 2006 ஆம் ஆண்டு வெளி­யிட்ட தேர்தல் அறிக்­கையை சட்­ட­மன்றத் தேர்­தலில் கதா­நா­யகன், ”ஹீரோ” என்­றார்கள். இப்­போது 2016 இல் வெளி­யிட்­டுள்ள தேர்தல் அறிக்­கையை ”சூப்பர் ஹீரோ” என்று சொல்­கி­றார்கள். சினி­மாவில் ஹீரோ வில்­ல­னிடம் சண்டை போட்டு கதா­நா­ய­கியை காப்­பாற்­றுவார். அதே­போல ஜெய­ல­லிதா என்ற வில்­லி­யிடம் இருந்து தமிழ் நாட்டை காப்­பாற்­று­கின்ற கதா­நா­ய­க­னாக தி.மு.க. தேர்தல் அறிக்­கையை தலைவர் கருணாநிதி வெளி­யிட்டு இருக்­கிறார் என்­பதை இன்­றைக்கு கண்­கூ­டாக பார்க்­கிறோம்.

நான் பல­முறை சொல்­லி­விட்டேன், ஜெய­ல­லிதா ஒரே மேடைக்கு வாருங்கள், நீங்கள் சொன்ன உறு­தி­மொ­ழி­களை எல்லாம் எடுத்துக் கொண்டு வாருங்கள், நீங்கள் வரா­விட்­டாலும் உங்­க­ளுக்கு அடுத்து இருக்கக் கூடி­ய­வர்­களை அனுப்பி வையுங்கள், நானும் வரு­கிறேன். ஒன்று மேடையை நீங்கள் போடுங்கள் அல்­லது நான் போடு­கிறேன். நான் ரெடி நீங்க ரெடியா என்று கேட்டேன். ஆக இது­வரை எந்த விளக்­கமும் இல்லை.

தலைவர் கருணாநிதி வெளி­யிட்­டுள்ள தேர்தல் அறிக்­கையில், 501 வாக்­கு­று­தி­களை வழங்கி இருக்­கிறார். காரணம் 5 ஆண்டு ஆட்­சியில் நாம் 50 வருடங்கள் பின்­னோக்கி சென்று விட்டோம். அது முன்­னோக்கி வர வேண்­டு­மென்றால் 501 வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றினால் மட்­டும்தான் முடியும். ஆனால் ஜெய­ல­லிதா வெளி­யிட்­டி­ருப்­பது வெறும் 50 வாக்­கு­று­திகள் தான் என்றார்.