ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது

Published By: R. Kalaichelvan

22 Jul, 2019 | 12:27 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுது­மலை வடக்கு தமிழ் கலவன் பாட­சாலை  முன்­பாக ஆவா குழு  உறுப்­பினர் எனக் கூறப்­படும்  இளைஞர் ஒருவர்  பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஆவா குழுவில் இருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்­படும் மற்­றொரு குழுவின்  தலைவன் மீது தாக்­குதல் நடாத்­தவே இணுவில் பகு­திக்கு  மூன்று மோட்டார் சைக்­கிள்­களில்  இவர்கள் வந்­துள்­ள­தாக இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களில் இருந்து சந்­தே­கிப்­ப­தாக  விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறினார்.

இந் நிலையில் மானிப்பாய் - இணுவில் சம்­பவம் தொடர்பில்  கொல்­லப்­பட்ட ஆவா குழு உறுப்­பி­ன­ருடன் அப்­ப­கு­திக்கு  வந்து, பொலிஸ் துப்­பாக்கிச்  சூட்டை அடுத்து, தப்­பி­யோ­டிய 5 ஆவா குழு உறுப்­பி­னர்­களில் இரு­வரை நேற்று மாலை ஆகும் போதும் பொலிஸார் அடை­யாளம் கண்­டி­ருந்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர வீரகேச­ரிக்கு கூறினார். 

அடை­யாளம் காணப்­பட்­டோரைக் கைது செய்­யவும் ஏனை­யோரை அடை­யாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும்  இவ்­வ­ரு­டத்தில் நேற்று வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் மட்டும் யாழ். குடா­நாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

நேற்று முன்­தினம் இரவு 8.40 மணி­ய­ளவில், யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்த ஆவா குழு­வினர் மீது பொலிஸார் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யி­ருந்­தனர். ஆவா குழு இணுவில் பகு­தியில் வீடுகள் மீது தாக்­குதல் நடத்த வரு­வ­தாக மானிப்பாய் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய, முன் கூட்­டியே பிர­தே­சத்தின்  உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னைப்­படி,  கோப்பாய், மானிப்பாய் உள்­ளிட்ட பொலிஸ் நிலை­யங்­களின்  உத்­தி­யோ­கத்­தர்­களை உள்­ள­டக்­கிய  குழு­வினர் இரவு நேர விஷேட கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­துள்­ளனர்.

இதன்­போது பொலிஸார் பல இடங்­க­ளி­லிலும் பாதை­களில் வாக­னங்­களை சோதனை செய்­துள்­ளனர். அதன்­ப­டியே இணுவில் இணைப்பு வீதி­யிலும் பொலிஸ் குழு­வொன்று சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது. இதன்­போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்­கிள்கள் வேக­மாக வரு­வதை அவ­தா­னித்­துள்ள பொலிஸார் அம்­மோட்டார் சைக்­கிள்­களை நிறுத்­து­மாறு சமிக்ஞை காண்­பித்­துள்­ளனர். ஆனால் அதனை பொருட்­ப­டுத்­தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்­டார் சைக்­கிளில் முன் நோக்கி பய­ணிக்­கவே, பொலிஸார், தமது தற்­காப்பு அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடாத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது என்.பி. பீ.எப்.ஏ.4929 எனும் இலக்­கத்தை உடைய மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளைஞர் மீது துப்­பாக்கி தோட்­டாக்கள் இரண்டு பாய்ந்­துள்­ளன.

 இத­னை­ய­டுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்­டுப்­பா­டின்றி அருகில் இருந்த மதி­லுடன் மோதி விழுந்­துள்­ள­துடன், குண்­ட­டி­பட்ட இளை­ஞனும் படு­கா­ய­ம­டைந்­துள்ளான். இத­னை­ய­டுத்து 22 வய­தான கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த  செல்­வ­ரத்­தினம் கவிகஜன் எனும் அந்த இள­ஞனை பொலிஸார் யாழ். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர்,  எனினும் அங்கு சிகிச்சைப் பல­னின்று அவ்­வி­ளைஞன் உயி­ரி­ழந்­துள்ளார்.

இந் நிலையில் நேற்று குறித்த இளைஞன் தொடர்பில் பிரேத பரி­சோ­த­னைகள் யாழ். வைத்­தி­ய­சா­லையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­போது துப்­பாக்கிச் சூட்­டினால் அதிக இரத்தம் வெளி­யே­றி­யதால் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னி­டையே துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்ட இடத்தில் இருந்து குறித்த மோட்டார் சைக்­கி­ளுக்கு மேல­தி­க­மாக 2 வாள்கள், மேலும் இரு கூரிய ஆயு­தங்­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர். மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்­த­கடும் போலி­யா­னது என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்ள பொலிசார் சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்­பினர் ஒரு­வ­ரி­னு­டை­ய­தாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் பணப் பை ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய  மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41