பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் ; மதம் பரப்பும் நோக்கத்துடன்  வந்ததாக மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

22 Jul, 2019 | 10:55 AM
image

பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன்  கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.  

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அது தொடர்பில் தெரியவருவதாவது, 

பொன்னாலையில், குறித்த மதத்தை சார்ந்த மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பஸ் ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.

இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர்.

எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர். அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர்.

பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர்.

பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர்  அயல் கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்த முயற்சித்தனர். அதன் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர்.

இதேவேளை, மதம் பரப்பும் நோக்கத்துடன் எந்தக் எவர் பொன்னாலை மற்றும் கல்விளானுக்குள் நுழைந்தாலும் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என ஊர் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47