"பேஸ் ஆப்" இன் உதவியால் கண்டுப்பிடிக்கப்பட்ட நபர் !

Published By: R. Kalaichelvan

22 Jul, 2019 | 10:02 AM
image

3 வயது குழந்தையாக இருந்தபோது சீனாவில் காணமால்போன நபரொருவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு "பேஸ் ஆப்" இன் உதவியுடன் தனது குடும்பத்திடம் சேர்ந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகனான யு வீபெங், கடந்த 2001 ஆம் ஆண்டு மே மாதம் 3 வயது காணாமல் போயிருந்தார்.

பொலிஸாரின் விசாரணையில் அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது. அதனால் குறித்த நபர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமூகவளைத்தளங்களில் வைரல் ஆகிவரும் ‘பேஸ் ஆப்’ செயலி மூலம், 3 வயதில் கடத்தப்பட்ட தங்களது மகனை கண்டறிய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர்.

சிறுவயதில் எடுக்கப்பட்ட யு வீபெங்கின் புகைப்படங்கள் பலவற்றை தற்போதைய உருவத்திற்கு மாற்றி, பொலிஸாரின் உதவியுடன் தேடினர்.

அத்தோடு பொலிஸாரின் தீவிர முயற்சியில் யு வீபெங்  கண்டுபிடிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளின் பின் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right