பதினொரு அமைச்சுக்களுக்கான 55 மில்லியன் ரூபாவுக்கான குறை­நி­ரப்பு பிரே­ர­ணையில் கையெ­ழுத்­திட்டு சபா­நா­யகர் அனு­மதி வழங்­கினால் சபா­நா­யகர் நீதி­மன்றம் செல்ல வேண்­டிய நிலை ஏற்­படும் என பொது எதிர்க்­கட்­சி­யினர் தெரிவித்தனர்.

மேலும் பாரா­ளு­மன்ற செயலாளர் நாயகம் பதவி விலக வேண்டும் அப்­ப­த­வியை தொடர அவ­ருக்கு தகு­தி­யில்­லை­யென்றும் பொது எதிர்க்­கட்சி தெரி­வித்­தது. 

பாரா­ளு­மன்ற குழு அறையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை நடத்­திய விசேட செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே பொது எதிர்க்­கட்­சி­யினர் இதனை தெரி­வித்­தனர்.

பொது எதிர்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் தினேஷ் குண­வர்­தன எம்.பி. குறிப்பிடுகையில்

கடந்த 5 ஆம் திகதி அர­சாங்கம் திருட்­டுத்­த­ன­மாக வாக்­க­ளித்து குறை­நி­ரப்பு பிரே­ர­ணையை நிறை­வேற்றிக் கொண்­டது. இது சட்­ட­வி­ரோ­த­மாகும்.

சபா­நா­ய­க­ருக்கு இது தொடர்பில் அன்­றைய தினமே தீர்ப்பு வழங்­கி­யி­ருந்த போதும் அது வழங்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்கும் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தோடு அக்­கு­ழுவின் அறிக்கை கிடைக்கும் வரையில் குறை­நி­ரப்பு பிரே­ர­ணையில் கையெ­ழுத்­திட மாட்டேன் என சபா­நா­யகர் எம்மிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இதன்­மீது நம்­பிக்கை வைத்­துள்ளோம். அதனை மீறி சபா­நா­யகர் இப் பிரே­ர­ணையில் கையெ­ழுத்­திட்டு அனு­மதி வழங்­கினார். சபா­நா­யகர் நீதி­மன்றம் செல்ல வேண்டி நேரிடும். இலங்கை பாரா­ளு­மன்ற வர­லாற்றில் முதன்­மு­றை­யாக வாக்­க­ளிப்பில் மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக உலகம் பூராவும் உள்ள பாரா­ளு­மன்­றங்கள் எம்­மிடம் தொடர்பு கொண்டு கேட்­கின்­றன . “உங்கள் பாரா­ளு­மன்­றத்தில் கள்­ள­வாக்கு போடப்­பட்டு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாமே” என வின­வு­கின்­றனர்.

இது இலங்­கையின் கௌர­வத்­திற்கு ஏற்­பட்ட கரும் புள்­ளி­யாகும்.

பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்தை

நாம் மிரட்­ட­வில்லை. சுமு­க­மான பேச்சு நடத்தி சான்­று­களை ஆராய்ந்தோம். இதன்­போது சம அளவில் வாக்­குகள் கிடைத்­தி­ருப்­பதை செய­லா­ளர்கள் நாயகம் உட்­பட இதர அதி­கா­ரிகள் ஏற்­றுக்­கொண்­டனர் என்றார்.

விமல் வீர­வன்ச எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்

பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் வாக்­கு­களை எண்­ணு­வதில் பித்­த­லாட்டம் செய்து அர­சுக்கு சார்­பாக நடந்து கொண்­டுள்ளார்.

எனவே அவர் அப்­ப­த­வியில் இருப்­ப­தற்கு தகு­தி­யில்­லா­தவர். அவர் மீதான நம்­பிக்கை இழக்­கப்­பட்டு விட்­டது. எனவே அவர் கௌர­வ­மாக தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்து வெளி­யேற வேண்டும்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டில் இல்­லாத வேளையில் அரசின் பிரே­ர­ணை­யொன்றை தோற்­க­டிப்­ப­தற்கு ஐ.தே.கட்­சியில் ரணில் எதிர்ப்­பா­ளர்கள் முயற்­சித்­த­னரா என்ற சந்­தே­கமும் இப்­பி­ரச்­சினை தொடர்பில் ஏற்­பட்­டுள்­ளது.

எதிர்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கோ அல்­லது தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கோ பிரச்­சி­னை­யில்லை. ஆனால் உண்­மை­யான மக்கள் பிர­தி­நி­தி­க­ளான எமக்கு மக்கள் மீது வரிகளை சுமத்தி ஆட்­சி­யா­ளர்­களின் சுக­போக நிதிக்­கான பிரேரணைகளை நிறைவேற்ற இடமளிக்க முடியாது.

பாராளுமன்ற சம்பிரதாயங்களை இல்லாதொழிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பிக்களை கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.