Retinitis pigmentosa என்ற பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Daya

20 Jul, 2019 | 03:28 PM
image

Retinitis pigmentosa என்ற பார்வைத்திறன் குறைபாட்டிற்கு, தற்போது புதிதாக ஜீன் தெரபி என்ற சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எம்மில் சிலருக்கு இரவு நேரங்களில் எதிரில் வரும் வெளிச்சங்களால் உருவங்கள் தெளிவாக தெரிவதில்லை. அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களோ அல்லது இரண்டு ஆண்டுகளோ கழித்து பகலிலும் உருவங்கள் தெளிவாக தெரிவதில்லை. அதனைத் தொடர்ந்து நாளடைவில் அவர்கள் பார்வைத் திறனை முழுவதாக இழந்துவிடுவார்கள்.

இத்தகைய நிலை உங்களில் யாருக்கேனும் ஏற்பட்டால் அவர்கள் Retinitis pigmentosa என்ற அரிய வகை பார்வைத்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம். இதற்கு இதுவரை சிகிச்சை கண்டறியப்படாமல் இருந்தது. தற்போது அமெரிக்காவில் இதற்கு ஜீன் தெரபி என்ற சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

எம்முடைய விழித்திரையின் உட்பகுதியில் Rods & Cone என இரண்டடுக்குகள் கொண்ட செல்கள் உள்ளன. இவை தான் உருவங்களின் தெளிவையும் நுட்பத்தையும் விழித்திரையின் வழியாக மூளைக்கு கடத்துகிறது. சிலருக்கு பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாக புத்தாக்கம் பெறுவதில்லை.

அத்துடன் இத்தகைய செல்கள் சிறிது சிறிதாக அழிந்துவிடுகின்றன.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டுதோறும் கண் பரிசோதனை அவசியம் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இது பாரம்பரிய மரபணுகள் குறைபாடாகவே ஒருவரை தாக்குகிறது. எந்த வயதிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பினை தொடக்க நிலையில் கண்டறிந்தால், அதன் பாதிப்பு மேலும் விரிவடையாமல் தற்காத்துக்கொள்வதற்கான சிகிச்சைகளை பெறலாம். தற்பொழுது இதற்கு சிகிச்சையாக அளிக்கப்பட்டு வரும் மருந்துகள், நிவாரணங்கள் எல்லாம் இந்த செல்களை தக்கவைத்துக் கொள்வதிலும், இந்த செல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்டிருக்கும் ஜீன் தெரபியில் Sheets of Human Retinal Progenitor Transplants என்ற சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, பார்வை திறன் இழப்பை கட்டுப்படுத்த இயலும். தற்போது சிலருக்கு மேற்கொள்ளப்பட்டு வெற்றிப்பெற்றிருக்கும் இந்த நவீன சிகிச்சை விரைவில் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் என தெரியவருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32