சம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் ; இராணுவத்தினர் குவிப்பு

Published By: Digital Desk 4

19 Jul, 2019 | 03:09 PM
image

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இருவர்  துப்பாக்கியைக் கொண்டு தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர்  தெரிவித்ததையடுத்து அப்பகுதியில்  பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த  காணியில் இன்று  வெள்ளிக்கிழமை (19) காலை அதன் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு  உலாவிக் கொண்டிருந்த இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அருகிலுள்ள  இராணுவத்தினரும் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த இருவரும் அவ்விடத்திலிருநது  தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில்  குவிக்கப்பட்டு குறித்த பிரதேசத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும், நபர்களோ  கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30