குருணாகல் - வீரம்புகெதர - பிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிள்  பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் வீரம்புகெதர பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இவ்விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.