புதிய நிய­ம­னங்­களை பொறுப்­பேற்­கா­தோ­ருக்கு  7 வரு­டங்­க­ளுக்கு அரச தொழில் வழங்­கப்­ப­டாது- ஆளுநர் சுரேன் ராகவன்

Published By: Daya

19 Jul, 2019 | 01:58 PM
image

அரச பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பித்து அதற்­கான நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­கின்­ற­போது தாங்கள் விரும்­பிய இடத்­துக்கு நிய­மனம் கிடைக்­க­வில்­லையே என செல்­லாது இருப்­போ­ருக்கு ஏழு வரு­டங்­க­ளுக்கு எந்­த­வித அரச உத்­தி­யோக நிய­ம­னங்கள் வழங்­கு­வதில்­லை­யென வட மாகா­ணத்தில் ஓர் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக வடக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன் தெரி­வித்தார்.

மன்­னாரில் மாவட்ட செய­ல­கத்தில் புதன் கிழமை நடை­பெற்ற நிகழ்வில் 77 பேருக்கு அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் நிய­ம­னங்­களும், 3 பேருக்கு கலா­சார அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் பத­வி­களும், 9 நபர்­க­ளுக்கு தகவல் தொழில் நுட்ப ஆசி­ரியர் பத­வி­க­ளுக்­கு­மான நிய­மனக் கடி­தங்கள் வழங்கும் நிகழ்வு இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன் மற்றும் இவ­ருடன் இணைந்து மன்னார் மாவட்ட செய­லா­ளரும் அர­சாங்க அதி­ப­ரு­மான சீ.ஏ.மோகன்ராஸ், வட மாகாண அமைச்­சுக்­களின் மகளீர் விவ­கார அமைச்சின் செய­லாளர், உள்­ளூராட்சி திணைக்­கள ஆணை­யாளர், சுகா­தார துறை அமைச்சின் செய­லாளர், விவ­சாய அமைச்சின் செய­லாளர், கல்வி அமைச்சின் செய­லாளர், வடக்கு மாகாண ஆளு­நரின் செய­லக செய­லாளர் ஆகியோர் கலந்து கொண்­டனர்.

தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்­களை வழங்கி அங்கு வடக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் என்ற பத­வி­க­ளுக்­கான நிய­மனக் கடி­தங்­களை நீங்கள் பெறு­கின்­றீர்கள். இந் நிய­ம­னத்தை பெறும் நீங்கள் உங்கள் கட­மை­களை சிறப்­பான முறையில் மேற்­கொள்ள வேண்டும்.

இப் பத­வி­க­ளுக்­கான நிய­மனம் இது ஐந்­தா­வது தட­வை­யாக வழங்­கப்­ப­டு­கின்­றது. இப் பத­வி­களைப் பெறுவோர் ஒழுக்­கத் ­துடன் தங்கள் கட­மை­களை செய்ய வேண் டும்.

இந் நிய­ம­னத்தை பெற்­ற­வுடன் அடுத்து நீங்கள் செய்­வது என்­ன­வெனில் உடன் இடம்­மாற்றம் கோரு­வது. சிலர் நிய­ம­னத்தை பெற்று ஒரு மாத கால­மாக நிய­மிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கு செல்­லாது இருப்­பது.

குறிப்­பிட்ட இடங்­க­ளுக்கு போகாமல் இருப்­பதை அறிந்து ஒன்­றரை மாதத்­துக்குப் பின்தான் எமக்கு தெரி­ய­வரும் இவர்கள் தங்கள் கட­மை­களை பொறுப்­பேற்­க­வில்­லை­யென்று.

உங்­க­ளுக்கு பரீட்சை வைத்து பின் நேர்­முகப் பரீட்சை வைத்து அதி­கா­ரிகள் உங்­க­ளுக்­காக தங்கள் நேரங்­களை செல­வ­ழித்து இருந்­தாலும் தங்கள் கட­மை­களை பொறுப்­பேற்­க­வில்லை என தெரி­விப்­பதும் இல்லை.

இவர்கள் தாங்கள் ஏன் பத­வியை ஏற்­க­வில்லை என சொல்­லா­தி­ருக்­கும்­போதும் நாங்கள் அதி­கா­ரி­கள்தான் இதை கண்டு பிடிக்க வேண்­டிய நிலையில் இருக்­கின்றோம்.

நாங்கள் வட மாகா­ணத்தில் ஒரு தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம். அதா­வது ஒருவர் அரசு உத்­தி­யோ­கத்­துக்­கான நிய­மனம் கோரி அதற்­கான நிய­ம­னத்­துக்கு உரித்­து­டை­யாகி  அதை  ஏற்­றுக்­கொள்­ளாமல் இருந்தால் அவர் ஏழு வரு­டங்­க­ளுக்கு எந்த அரச உத்­தி­யோ­கப் பத­வி­க­ளுக்கும் உரித்­தா­ள­ராக இருக்க மாட்டார். இது விளை­யாட்­டாகச் சொல்­ல­வில்லை. உண்­மை­யா­னது.

பத­விக்கு விண்­ணப்­பித்து அவற்றை ஏற்­காது இருந்தால் அது மக்­க­ளுக்கும், அர­சுக்கும் செய்யும் துரோ­க­மா­னது. அதி­கா­ரிகள் காலத்தை நேரத்தை செல­வ­ழித்து மக்­க­ளுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும் என செயல்­ப­டு­கின்­றனர்.

ஆனால் தாங்கள் நினைத்த இடத்­துக்கு நிய­மனம் தர­வில்­லை­யென்றே இவர்கள் இந்த நிலைப்­பாட்­டுக்குச் செல்­லு­கின்­றனர். ஒரு வரு­ட­மா­வது குறிப்­பிட்ட இடத்­துக்குச் சென்று சேவை செய்ய முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.

நீங்கள் நிய­மனம் பெற்று குறிப்­பிட்ட இடத்­துக்குச் செல்ல முடி­யா­விடில் இங்­குள்ள வெற்­றி­டங்­களை வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து நிரப்பும் அதி­காரம் எங்­க­ளுக்கு உண்டு.

சில­ருக்கு ஏற்­றுக்­கொள்ளக் கூடிய கார­ணங்கள் உண்டு. அதை நாங்கள் கலந்து ஆலோ­சித்து தீர்க்கக் கூடிய நிலையும் இருக்­கின்­றது. ஆகவே உங்­க­ளுக்கு தற்­பொ­ழுது வழங்­கப்­படும் உத்­தி­யோகப் பணியை ஆரம்­பி­யுங்கள்.

அர­சாங்க உத்­தி­யோ­கம் என்­பது  குறிப்­பி­டப்­படும் இடத்­துக்கு நாங்கள் செல்வோம் என்றே கையொப்பம் இட்டே கட­மையை பொறுப்­பேற்­கின்­றீர்கள். அது உங்­க­ளுக்கு மட்­டு­மல்ல நீதிவான் தொடக்கம் பொலிஸ் போன்ற அனைத்து உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் இது பொருந்­து­கின்­றது.

தற்­பொ­ழுது உங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற நிய­ம­னத்தில் உங்­க­ளுக்கு விருப்பம் இல்­லையேல் இன்று நான் நான்கு மணி வரை இங்கு நிற்பேன். என்­னிடம் வந்து சொல்­லுங்கள் நான் அந்த இடத்தில் உங்­க­ளுக்கு சேவை செய்ய முடி­யாது என தெரி­வித்து உங்­களை அப் பத­வி­யி­லி­ருந்து விடு­வித்து விடு­கின்றேன்.

மக்கள் சேவை மகேசன் சேவை என சொல்­லு­வார்கள். உங்கள் சேவை­யைப்­பற்றி மகே­ச­னி­டம்தான் கேட்க வேண்டும். நாம் எதைச் செய்­தாலும் ஒருநாள் இறைவனுக்கு கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

நான் மன்னாருக்கு வந்து கொண்டி ருந்தபொழுது மிகவும்  கஷ்டப்படுகின்ற மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாம் சேவை செய்வதற்கு குளிரூட்டும் அறையும் சுழல் கதிரையும் தரப்படுகின்றது. ஆகவே நமக்கு தரப்படுகின்ற சம்பளத்துக்கும் நாம் எந்த இனமாக மதமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் சேவை செய்யும் நபர்களாக இருக்க வேண்டும் என வேண்டி இறை ஆசீர் வழங்கி நிற்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47