கடற்பரப்புகளில் நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் தொடரும்...

Published By: Vishnu

19 Jul, 2019 | 12:17 PM
image

நாட்டின் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை 2019 ஜுலை 21 ஆம் திகதி காலை வரை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மீனவர்கள் 2019 ஜுலை 21ஆம் திகதி காலை வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36