மஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்கவே முடியாது  :    பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திட்டவட்டம்

Published By: MD.Lucias

06 May, 2016 | 04:22 PM
image

(ஆர்.யசி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை  நீக்குவதற்கு  பாதுகாப்புத்துறை எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எந்த காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவப் பாதுகாப்பை வழங்கவே முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

இராணுவத்தின் சேவையை கொச்சைப்படுத்தும் வகையில் இவர்கள் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றார். 

இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

இராணுவப் பாதுகாப்பு என்பது அரசியல் விவகாரம் அல்ல. இது நாட்டின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். அந்த விடயங்களில் அனாவசியமான விமர்சனங்களை முன்வைக்கவோ அல்லது தமது விருப்பத்துக்கு அமைய இராணுவ செயற்பாடுகளில் தலையிடவோ முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21