புதிய பஸ் நிலைய சோதனைச்சாவடியை உடன் அகற்றவும் -மஸ்தான் எம். பி. கோரிக்கை

Published By: Daya

19 Jul, 2019 | 12:16 PM
image

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனைச்சாவடியால் தினமும் பயணிகள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எங்கேயோ குண்டு வெடித்ததற்கு இங்கு சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர். தற்போதுள்ள நிலைமைகளில் இச் சோதனைச்சாவடி பஸ் நிலையப்பகுதியில் தேவையற்றதே இதனை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றேன். 

இவ்வாறு இன்று காலை  பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் சந்தித்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து பாதுகாப்புத்தரப்பினருக்கு நாங்கள் கடுமையான அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆனால் தற்போது ஆட்சியாளர்களாக இருக்கின்றவர்கள் இது குறித்து பேசமுடியும் இவ்விடயங்களில் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து ஒரு முயற்சி மேற்கொள்ளவேண்டும் எங்கேயோ குண்டுகள் வெடித்ததற்காக இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பொதுமக்களுக்கு இடையூறுகளையும் அதிகளவில் ஏற்படுத்தியுள்ளார்கள். 

இதனைப்பேசும்போது நாங்கள் பாதுகாப்புத்தரப்பினரை குறைகூறுவதாக அமைந்துவிடக்கூடாது. தற்போது நிலைமைகள் சீராகி வருகின்றது. எந்தப்பகுதிகளிலும் இவ்வாறான பாரிய சோதனைகள் காணப்படவில்லை இதனால் மக்களுக்கு பாரியளவில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. 

இச் சோதனை சாவடியினை புதிய பஸ் நிலையப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றி பொதுமக்களுக்கு இடையூறுகள் இன்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுக்கின்றேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38