நங்கூரமிடப்பட்ட கப்பல் கரையொதுங்கியது 

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 02:07 PM
image

நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்று கரையொதுங்கிய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.

' ஸ்ரீலங்கன் குளோரி ' எனப்படும் கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. காலி கடற்பிரதேசத்தின்   ஹுனவடுன்ன - ருமஸ்வெல எனும் இடத்திலேயே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி துறைமுகத்தை நோக்கி சென்ற சரக்கு கப்பல்  ஹுனவடுன்ன கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இது தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டாரவிடம் வினவிய போது , 

' ஸ்ரீலங்கன் குளோரி ' சரக்கு கப்பலொன்றாகும். இதில் கப்பலுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 15 தொன் எரிபொருள் காணப்படுகிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

இந்த கப்பலில் இருந்த 9 பேரும் கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர். 

எனினும் இந்த கப்பலில் ஏதேனும் சிதைவுகள் ஏற்பட்டால் அதிலிருக்கும் எரிபொருள் கசிவதோடு, அது கடல் நீரில் கலப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது. இதனால் எவ்வாறு பாதுகாப்பான முறையில் கப்பலை மீட்பது என்பது குறித்து கடற்படை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18