வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடாத விவகாரம்: பொது சின்னத்திற்காக காத்திருக்கிறோம்- தினகரன்

Published By: Daya

19 Jul, 2019 | 12:04 PM
image

பொது சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ரி. ரி .வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று பணிகள் முடிந்து விடும் என நம்புகிறோம். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

அ. ம. மு. க. நீர்த்துப் போய்விட்டது என பொதுமக்களிடையே ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதை முறியடித்து வெற்றி பெறுவோம். தவறானவர்களின் கையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயக்கமான அ.தி.மு.க.வை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக அ. ம. மு. க. வை உருவாக்கி வருகிறோம். தேர்தல் தோல்வியால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

அவரது சொந்த ஊரில் வீடு அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி பதிவு செய்யப்பட்ட பிறகு, அ. ம. மு. க. வுக்கு என தனி சின்னம் கிடைக்கும். அதற்கு முன் தொகுதிக்கு ஒரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்பதற்காக வேலூர் மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளோம்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் புதிய மசோதா கொண்டுவரப்படும் என அறிவித்திருப்பது தமிழக மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றுவதாக இருக்கிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஹைட்ரோகார்பன் ,மீத்தேன், நியூட்ரினோ, நீட் தேர்வு ஆகியவற்றில் மத்திய அரசுக்கு ஆதரவான போக்கை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், கட்சியினரை குழப்பி பதவி , பணி ஒப்பந்தங்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆள் பிடிக்கின்றனர். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டியே வெளியே எடுப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47