இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள உலக வங்கி 

Published By: Digital Desk 4

18 Jul, 2019 | 05:14 PM
image

மூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்காக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர்  (Hartwig Schafer) தெரிவித்தார்.

Image result for world bank

இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

திடீர் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை, மீள்பிறப்பாக்க மின்சக்தி, கிராமிய பிரதேசங்களில் குளங்களை புனரமைப்பு செய்வதற்கான உதவி ஆகியன இந்த புதிய செயற்திட்டங்களில் உள்ளடங்குகின்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஹார்ட்விங் சேபர், வளமான பொருளாதார அடிப்படையில் அமைந்துள்ள இலங்கைக்கு தொடர்ச்சியாக சர்வதேச கடன் உதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பதற்காக உலக வங்கியின் நிதியுதவியை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பிற்காக இதன்போது உலக வங்கிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் முகங்கொடுத்த சவால்களை வெற்றிகொள்வதற்கு உலக வங்கியினால் வழங்கப்பட்ட நிதியுதவியை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இந்த துன்பியல் நிகழ்விற்கு பின்னர் இலங்கை துரிதமாக இயல்புநிலைக்கு திரும்பி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த உப தலைவர், அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களின் போதும் சர்வதேச சமூகம் இலங்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

உலக வங்கியின் வலய சிரேஷ்ட முகாமையாளர்களின் மாநாட்டுக்கு தலைமை தாங்குவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள உப தலைவர் உலக வங்கி தனது வருடாந்த கூட்டத்தொடரை நடாத்துவதற்கு இலங்கையை தெரிவு செய்திருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எழுந்திருப்பதற்கு இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவுவதற்காகவேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை தற்போது உயர் மத்திய வருமானம் பெறும் நாடாக மாறியிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த உப தலைவர்இ சவால்களுக்கு மத்தியில் சளைக்காமல் எழுந்திருப்பது இலங்கையிடமுள்ள விசேட பண்பாகும் என்பதற்கு இது நல்ல சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் வதிவிட பணிப்பாளர் Idha Z Pswarayi - Riddihough, சர்வதேச நிதி ஒத்துழைப்புக்கான வதிவிட முகாமையாளர் அமீனா ஆரிப், சிரேஷ்ட செயற்படுத்தல் அதிகாரி Anne- Katrin Arnold, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58