13  ஆம் நூற்றாண்டிற்குரிய ஆலயம் மன்னாரில் கண்டுப்பிடிப்பு

Published By: Digital Desk 3

18 Jul, 2019 | 05:10 PM
image

மன்னார் குருந்தன் குளம் பகுதியில் புராதன விநாயகர் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம்  யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவரும் தொல்லியல்துறை இணைப்பாளருமான சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேசமான குருந்தன் குளம் பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றி ஆராயும்போது, இவ்விடம் சிங்கள இலக்கியமான இராஜாளி மற்றும் பாளி நூலான சூள வம்சம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் ‘குருந்தி’ என்ற இடமாக இருக்கலாம் என பேராசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் ‘சாவகனுக்கும்’ இவ்விடத்திற்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதை மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவ்விநாயகர் ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றுடன், பழைமையான சுவர்களும் தூண்களும் காணப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36