பொலிஸ் மா அதிபரினால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 57 பேர் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிக்கையில் பதவி உயர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பொலிஸ் ஊடக பேச்சாளரான ருவான் குணசேகர உள்ளடக்கப்படுவதோடு டீ.ஜே. அத்துலத்முதலி, பியதாச, சரத்குமார மற்றும் இரண்டு பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.