ஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா

Published By: Rajeeban

18 Jul, 2019 | 11:43 AM
image

ஈரானும் அதன் சகாக்களும் மத்திய கிழக்கில் அதிகளவில் ஆளில்லா விமானங்களை கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா அச்சமடைந்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினர் மற்றும் அவர்களது தளங்களை  கண்காணிக்கும் நடவடிக்கையை ஈரான் அதிகரித்துள்ளது என  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு அப்பால் ஈரானால்  ஆயுதங்களை வீசுவதற்கும் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதற்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடியும் என அமெரிக்க அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் ஆதரவு யேமனின் ஹெளத்தி  கிளர்ச்சியாளர்கள் அதிகளவில் ஆளில்லா விமானதாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்,ஈரானின் முக்கிய எதிரி நாடான சவுதி அரேபியாவின் விமானநிலையங்களை ஆளி;ல்லா விமானங்களை பயன்படுத்தி அவர்கள் தாக்குகின்றனர்.

ஆமெரிக்கா சவுதிஅரேபியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்காகவும்  சமாளி;ப்பதற்காகவுமே ஈரான் மற்றும் அதன் சகாக்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றன என முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் நாளாந்தம் வளைகுடா கடற்பரப்பி;ன் மேலாக இரண்டு அல்லது மூன்று ஆளில்லா விமானங்களை செலுத்துகின்றது என தெரிவித்துள்ள அதிகாரி உலகின் அதிகளவு எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கண்காணிப்பதற்காக ஈரான் தனது ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஈராக்கில் உள்ள  அமெரிக்க படைகளை கண்காணிப்பதற்கான ஈரானின் நடவடிக்கை குறித்த மேலதிக தகவல்களை வழங்குவதற்கு அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஈராக்கிலுள்ள எங்கள் தளங்களிற்கு மேல் டிரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ள அதேவேளை மற்றொரு அதிகாரி இது கவலையளிக்கும் விடயம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை சமீபகாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது மோட்டார் மற்றும் ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.ஆனால் அமெரிக்க படையினர் எவரும் காயமடையவில்லை என தெரிவித்துள்ள ரொய்ட்டர்  இதற்கும் டிரோன் கண்காணிப்பிற்கும் தொடர்பில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17