வலைபந்தாட்ட வீராங்கனை தர்ஜினி புதிய சாதனை 

Published By: Digital Desk 4

17 Jul, 2019 | 08:22 PM
image

இலங்கை வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி தர்ஜினி சிவலிங்கம் தனது 100 ஆவது சர்வதேச வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடி சாதனைiய  நிலைநாட்டினார்.

இதனை முன்னிட்டு தர்ஜினியைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவம் ஒன்று லிவர்பூலில் வீராங்கனைகள் தங்கியுள்ள ஹொலிடே இன் ஹோட்டலில் இன்று பிற்பகல் நடத்தப்பட்டது.

அணி முகாமையாளர் ட்ரிக்ஸி நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பயிற்றுநர் திலக்கா ஜினதாச, அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய, ஏனைய வீராங்கனைகள் ஆகியோர் கலந்துகொண்டு தர்ஜினியை வாழ்த்தினர்.

இந்த வைபவத்தில் பேசிய தர்ஜினி, 

நான் இப்படி ஒரு வைபவத்தை எதிர்பார்க்கவில்லை. எனவே இதனை ஏற்பாடு செய்து என்னைக் கௌரவித்தமைக்காக அணி முகாமையாளர், பயிற்றுநர் மற்றும் வீராங்கனைகளுக்கு நன்றி கூறுகின்றேன். சர்வதேச வலைபந்தாட்டத்தில் என்னை அறிமுகப்படுத்திய ட்ரிக்ஸி நாணயக்காரவுக்கு விசேட நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். 

அத்துடன் எனக்கு ஒத்துழைப்பு நல்கி உற்சாகப்படுத்தி இந்நிலைக்கு உயர்த்திய பயிற்றுநர் திலக்கா ஜினதாச, ஏனைய பயிற்றுநர்கள், சக வீராங்கனைகள், இரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார். 

பிஜி அணிக்கு எதிராக லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் மூலம் தர்ஜினி சிவலிங்கம் 100ஆவது சர்வதேச வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய மூன்றாவது இலங்கை வீராங்கனை ஆனார். இதற்கு முன்னர் காயத்ரி மற்றும் சஷிக்கா ஆகியோர் 100 சர்வதேச வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிய இலங்கை வீராங்கனைகளாவர்.

இலங்கை வலைபந்தாட்ட அணியில் 2009 இல் அறிமுகமான தர்ஜினி சிவலிங்கம் கடந்த நான்கு வருடங்களாக வலைபந்தாட்ட விளையாட்டில் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் பதவியிலிருந்த நிருவாகிகளும் பயிற்றுநர்களும் தர்ஜினியை கருத்தில்கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

எனினும் அவுஸ்திரேலியாவில் 2018 இல் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடி தனது ஆற்றல்களை வெளிப்படுத்திய தர்ஜினி சிவலிங்கம் அங்கு அதி சிறந்த விராங்கனை விருதை வென்று தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை அடுத்து தற்போதைய பயிற்றுநர் திலக்கா ஜினதாச அவரை மீண்டும் அணியில் இணைத்து உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாட வைத்தார்.

(இங்கிலாந்தின் லிவர்பூலிலிருந்து நெவில் அன்தனி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20