தனித்தனியாக தமது வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ள தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்

Published By: Digital Desk 4

17 Jul, 2019 | 06:53 PM
image

சாஃபா, மார்வா எனும் இரட்டையர்கள் 2017ஆம் ஆண்டு பெஷாவரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தனர். 

Safa and Marwa were craniopagus twins — fused at the head.

பிறவியிலேயே இந்த இருவரின் மண்டை ஓடுகள் ஒட்டிக்கொண்டிருந்தன.

ஒன்றரை வருடங்களாக தலை ஒட்டிய நிலையில் வாழ்ந்து வந்த இந்த குழந்தைகள் தற்போது தனித்தனியாக தமது வாழ்வை வாழும் வாய்ப்பை லண்டனில் உள்ள “க்ரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்” வைத்தியசாலை வழங்கியுள்ளது.

இந்த வைத்தியசாலையில் 4 மாதங்களுக்குள் 55 மணி நேரம் நடைபெற்ற  அறுவை சிகிச்சையின் பின்  இவ் இரட்டையர்கள்  வெற்றிகராமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இவ் அறுவை சிகிச்சையினை `க்ரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டை’ வைத்தியசாலையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவை சிகிச்சை வைத்தியர்களான ஜிலானி மற்றும் டுனாவே வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

பொதுவாக ஒரே கருமுட்டையில் இருந்து உருவாகுபவர்களே இரட்டையர்கள். இவர்கள் ஒட்டிப் பிறந்ததற்கு இரு கருமுட்டைகள் பிரிவதில் ஏற்படும் தாமதம் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் உடம்பில் அந்த பகுதி ஒட்டிய நிலையில் குழந்தைகள் பிறக்கின்றன. 

Great Ormond Street Hospital

இந்த குழந்தைகளின்  அறுவை சிகிச்சை நான்கு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. அதில் முக்கிய இரண்டுகட்டங்களில் முதல் கட்ட அறுவை சிகிச்சை 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

அதன் போது குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதியை சரி செய்யும் அறுவை சிகிச்சையை டேவிட் டுனவேவிற்  மேற்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ஒரு மாதம் கழித்து இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதில் இரட்டையர்களின் மூளை, இரத்த நாளங்களை பிரிக்கும் அந்த அறுவை சிகிச்சையை ஜிலானி மேற்கொண்டார். 

இவ் சத்திரசிகிச்சை மிக சவாலாக இருந்துள்ளது. மார்வாவுக்கு முக்கிய இரத்த நாளம் கொடுக்கப்பட்டதில் சாஃபாவிற்கு பக்கவாத நிலை ஏற்பட்டது. பெரும் போராட்டத்துக்கு பிறகு சாஃபாவின் உயிர் காப்பாற்றப்பட்டது. 

வைத்தியர்களின் பெரிய போராட்டத்துக்குப் பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சாஃபா மற்றும் மார்வா தற்போது தனித்தனியாக தங்களது வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர் என்கின்றது க்ரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டை வைத்தியசாலை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right