தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்

Published By: Digital Desk 4

17 Jul, 2019 | 03:31 PM
image

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?, 

அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ரணில் தமிழர் தாயகத்தில் விகாரை கட்டுவதை நிறுத்து, சிங்கள புத்த மத பயங்கரவாத்தினை நிறுத்த தமிழர்களுக்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின்  உதவி தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

879 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாகவே இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51