மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 23 ஆம் ஆண்டுத் தொடக்க விழா, தலைமைக் கழகம் தாயகத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ் ஆகியோர் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, கழகக்கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கினார். 

மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை -ஜீவன், மத்திய சென்னை -ரெட்சன் அம்பிகாபதி, செய்தி தொடர்பாளர் கோ.நன்மாறன், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார், மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், பகுதிச் செயலாளர்கள் தென்றல் நிசார், டி.ஜெ.தங்கவேலு, பந்தல் தேவராஜ் மற்றும் லட்சுமி ஜீவா  உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.