தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் 

02 Dec, 2015 | 08:53 AM
image

குற்றம் உறுதி செய்­யப்­ப­டாத அர­சியல் கைதி­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய வேண் டும். இந்த விட­யத்­தில் இன­வாத குழுக்­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்­சப்­போ­வ­தில்லை. சிறிய குழு­வி­னர்­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்­சினால் அர­சாங்­கத்­தினால் எத­னையும் செய்­ய­மு­டி­யாது.

தேசிய பிரச்­சி­னையை இதற்கு மேலும் இழுத்­த­டிக்க முடி­யாது . இதற்கு உரிய தீர்­வினை நாம் வழங்­குவோம். அதற்­கான வேலைத்­திட்­டங்கள் ஜன­வரி முதல் ஆரம்­பிக்­கப்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை அடிப்­ப­டை­யாக கொண்ட அதி­கா­ர­ப்ப­ர­வ­லாக்­கமே சிறந்­த­தாகும். எனினும் அதற்கு அப்பால் சென்று அதி­கா­ரத்தை பர­வ­லாக்கம் செய்­யவே நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். இதனை உள்­ள­டக்­கிய தேசிய நல்­லி­ணக்க கொள்­கையை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்க வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இறுதி யுத்­தத்தின் போது யுத்­த­க்குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கலாம். ஆகவே குற்றம் இழைக்­கப்­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும். இது தொடர்பில் விசேட நீதி­மன்றம் ஊடாக விசா­ரணை செய்­யப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் மிகவும் அவ­சி­ய­மாகும். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை புதிய அர­சாங்கம் ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்­ளது. இதன்­பி­ர­காரம் ஜன­வரி முதல் நல்­லி­ணக்­கத்­தையும் ஒரு­மைப்­பாட்­டையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு விசேட வேலைத்­திட்­ட­மொன்றை நாம் ஆரம்­பிக்­க­வுள்ளோம். இதனை தேசிய நல்­லி­ணக்க மற்றும் சமூக ஒரு­மைப்­பாட்டு அலு­வ­ல­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கண்­கா­ணிப்பின் கீழ் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

நாட்டில் சுமார் முப்­பது வரு­டங்­க­ளாக பாரிய யுத்தம் நடை­பெற்று வந்­துள்­ளது. விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ர­ாக யுத்தம் செய்து அதில் வெற்­றி­கொண்ட போதிலும் நாட்டில் வாழும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் தோல்­விக்­கண்டு விட்டோம். யுத்தம் நிறை­வ­டைந்து சுமார் ஏழு வரு­டங்கள் புர்த்­தி­யான போதிலும் சமா­தா­னத்­திற்­கான எந்­த­வொரு தீர்க்­க­மான திட்­டங்­களும் முன்­னைய ஆட்­சியின் போது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. எனினும் புதிய அர­சாங்­கத்­தினால் இதற்­கான ஏற்­பா­டு­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

நல்­லி­ணக்க வேலைத்­திட்டம்

ஜன­வரி மாதம் முதல் நல்­லி­ணக்க வேலைத்­திட்ட செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதனை நான்கு நிறு­வ­னங்­களின் ஊடாக நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்­க­ளி­ட­மி­ருந்து தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வினை காண்­ப­தற்­கான கருத்­துக்­களை கோர­வுள்ளோம். யுத்­ததின் கார­ண­மாக 30 வரு­டங்­க­ளாக தமிழ் மக்­களின் அபிப்பி­ரா­யங்கள் வெளிப்­ப­டா­மலே போயுள்­ளன. ஆகவே இது குறித்து எமது அலு­வ­லகம் விசேட அவ­தானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதனை முன்­னிட்டு நாம் குறித்த மாகா­ணங்­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்ளோம்.

இது தொடர்பில் அனைத்து அர­சி­யல்­கட்­சி­க­ளையும் சந்­திப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். குறிப்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சிறுப்­பான்­மை­யின அர­சி­யல்­கட்­சி­களை சந்­தித்து அதற்­கான ஏற்­பா­டு­களை மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இது தொடர்பில் வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னே­ஸ்­வரன் மற்றும் கிழக்கு முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் அழைப்பு விடுத்­துள்ளோம்.

இந்த வேலைத்­திட்­டத்தின் போது பாட­சா­லைகள் ரீதி­யாக பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம். பாட­வி­தா­னங்­களில் நல்­லி­ணக்கம் என்ற பெயரில் புதிய விட­ய­தா­னங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம். மேலும் பாட­வி­தா­னங்­களில் நல்­லி­ணத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் ஏதா­வது காணப்­படின் அதனை திருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும். அனைத்து மதங்­களின் அனுஷ்டா­னங்கள் தொடர்பில் மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு தெளிவுட்­ட­வுள்ளோம். அனைத்து மத அனுஷ்­டானங்­களை பாட­சா­லை­களில் அனு‘்­டிப்­ப­தற்கு ஏற்­பா­டு­களை செய்­துள்ளோம்.

அதே­போன்று எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் மொழி கொள்­கையில் பாரிய பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே புதிய கொள்­கையை தயா­ரிக்கும் பணி­க­ளிலும் அவ­தானம் செலுத்­த­வுள்ளோம். அத்­துடன் பெண்­களின் தலை­மையின் கீழ் விசேட குழுக்­களை நிறுவி, அவர்­க­ளது கருத்­துக்­களும் உள்­ள­டங்கும் படி­யாக விசேட திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும். அனைத்து நிறு­வ­னங்­க­ளிலும் தமிழ் மொழி ஆற்றல் கொண்­டோரை வேலைக்கு அமர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். நல்­லி­ணக்கம் தொடர்­பான பாட­சாலை மட்­டத்தில் செய­ல­மர்­வு­களை நடத்தி மாண­வர்கள் ஆசி­ரி­யர்­க­ளுக்கு தெளிவூட்­ட­வுள்ளோம். தற்­போது அரச நிறு­வ­னங்­களில் தமிழ் மொழி ஆற்­றல்­ளு­டையோர் 5 சத­வீ­தத்­தி­னரே காணப்­ப­டு­கின்­றனர். ஆகவே இவை அனைத்தும் நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்­பாக அமைய கூடும்.

ஆகவே தேசிய நல்­லி­ணக்கம் தொடர்­பாக விசேட கொள்­கை­யொன்றை தயா­ரிக்­க­வுள்ளோம். அதனை அர­சாங்­கத்­திடம் முன்­வைக்­கத்­திட்­ட­மிட்­டுள்ளோம். அதனை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்ளும் என்று நம்­பு­கின்றோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு

ஜன­வரி மாதம் முதல் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். குறித்த யாப்பில் நல்­லி­ணக்­கத்­திற்கு பிர­தான வகி­பாகம் வழங்­கப்­படும். அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் அதி­கார பர­வ­லாக்கம் என்­பது 2000 ஆம் ஆண்டு எனது ஆட்­சியின் போது முன்­வைக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு யோச­னையை விடவும் சிறப்­பா­னது. ஆகவே அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு அதி­கார பர­வ­லாக்கம் சிறந்­த­தாகும்.

ஆகவே அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம், பேச்சு சுதந்­திரம், சம­மான உரி­மைகள், மொழி சுதந்­திரம், சம­மான மொழி சுதந்­திரம், என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­படும். இதற்கு புத்­த­ஜீ­விகள், சட்­ட­வல்­லு­னர்­களின் ஆலோ­ச­னைகள் கோரப்­படும்.

அதன்­பி­ர­காரம் அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

யுத்தக் குற்றம்

இதே­வேளை இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை விசேட தீர்­மானம் ஒன்­றினை முன்­வைத்­துள்­ளது. எனினும் சர்­வ­தேச விசா­ர­ணையே முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்ட போதிலும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் கீழ் குறித்த பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துடன் புரிந்­து­ணர்­வுக்கு வந்­தது. எனினும் உள்­ளக விசா­ர­ணையின் போது தொழில்­நுட்ப உத­வி­களை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள நேரிட்டால் அதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

எனினும் யுத்­தக்­குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருப்­பதா என்­பது தொடர்பில் ஆரா­யவே உள்­ளக விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது குற்றம் இழைக்­கப்­பட்­ட­வர்கள் விசேட நீதி­மன்­றத்தின் மூல­மாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டுவர்.

அர­சியல் கைதி­களின் விடு­தலை

தற்­போது அர­சாங்­கத்­திற்கு அர­சியல் கைதிகள் விவ­காரம் பெரும் சவா­லாக மாறி­யுள்­ளது. ஆகவே குற்­றங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத அர­சியல் கைதிகள் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும். இந்த விட­யத்தில் மூன்று கட்­டங்­க­ளாக அவ­தா­னிக்க வேண்­டி­யுள்­ளது. இதற்­க­மைய சில கைதி­க­ளுக்கு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. அடுத்­த­தாக சில கைதி­களின் வழக்கு எந்­த­வொரு முடிவும் இன்றி கால­தா­மதம் அடைந்து வரு­கின்­றது. இவர்கள் விட­யத்தில் உட­னடி தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் அர­சியல் கைதி­களில் சாட்­சி­யங்கள் குற்­றங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­மனால் அவர்­க­ளுக்­கு­ரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.

இந்த விட­யத்தில் முன்பு அரசின் அனு­ச­ர­னையை பெற்­றுக்­கொண்­டி­ருந்த கே.பி. என்ற குமரன் பத்­ம­நா­த­னுக்கு எதி­ராக சட்டம் கடு­மை­யான முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும்.

இனவாதிகளுக்கு அஞ்சப்போவதில்லை

இதேவேளை அரசியல் கைதிகள் விடுதலைகளுக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில் இராவணாபலய போன்ற இனவாத அமைப்புகள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றன. எந்தவொரு நாட்டிலும் அடிப்படைவாதிகள் செயற்பாடுகள் காணப்பட்டு வருகின்றன. எனினும் ஒரு சிறிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல்களுக்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை இரத்து செய்யமுடியாது. இனவாத குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

அத்துடன் இனவாத குழுக்கள் மீளவும் ஆட்சிப்பீடமேறுவதற்கு முயற்சிக்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை.

விசேட நீதிமன்றம்

இலங்கையில் கடந்த பத்து வருட காலப்பகுதியில் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கவில்லை. எனினும் தற்போது நீதித்துறை சுயாதீன தன்மை ஆக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மோசடிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. ஆகவே இந்த விடயத்தில் நேர்மையான நீதிபதிகளுடன் கூடிய விசேட நீதிமன்றத்தின் ஊடாக உள்ளக பொறிமுறையை முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59