பொது இடத்தில் விசி­ல­டித்தால் சிறை 

Published By: Vishnu

17 Jul, 2019 | 12:38 PM
image

பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிக்கோ டுதெர்ட் ஊளை­யிட்டு விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பொது இடங்­களில் மேற்­கொள்­ளப்­படும் ஏனைய பாலியல் ரீதி­யான தொந்­த­ரவு நட­வ­டிக்­கை­களை குற்­றச்­செ­ய­ல்களாகக் கருதும்  புதிய சட்­ட­மொன்றை  நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மேற்­படி சட்­டத்தின் பிர­காரம் கைது­ செய்­யப்­ப­டு­ப­வர்கள்  6 மாதங்க­ளுக்கு மேலான சிறைத்­தண்­டனை மற்றும் 500,000 பெஸோ (9,750 டொலர்) வரை­யான தண்டப் பண விதிப்­பையும் எதிர்­கொள்ள நேரிடும்.

இந்தச் சட்டம்  தொடர்­பான ஆவ­ணத்தில் ஜனா­தி­பதி கடந்த ஏப்ரல் மாதம் கைச்­சாத்­திட்­டி­ருந்த போதும் அது தொடர்பில் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழ­மையே  அறி­விப்புச் செய்­துள்­ளனர். 

புதிய சட்­டத்தின் பிர­காரம்  வீதிகள், பணி­யி­டங்கள். பொது வாக­னங்கள் உள்­ள­டங்­க­லான பொது இடங்­களில்  பாலின அடிப்­ப­டை­யி­லான பாலியல் தொந்­த­ர­வு­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உண­வ­கங்கள் மற்றும் திரை­ய­ரங்­குகள் என்­பன உள்­ள­டங்­க­லாக பொது­மக்கள் கூடும்  இடங்­களில் இந்தச் சட்டம் தொடர்­பான எச்­ச­ரிக்­கை­களைக் காட்­சிப்­ப­டுத்தக் கோரப்­பட்­டுள்­ளது.

எனினும் இந்தச் சட்டம் குறித்து பெண்கள் உரிமைகள் தொடர்­பான அமைப்­பொன்று கூறு­கையில், ரொட்­றிக்கோ டுதெர்ட்  தானே அந்தச் சட்­டத்தை மீறும் ஒரு­வ­ராக உள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்­ளது.

ரொட்­றிக்கோ டுதெர்ட் பொது இடத்தில் உரை­யாற்­று­கையில், பெண்­களை பாலியல் ரீதியில் அவதூறு செய்யும் விமர்சனங்களை  வெளியிட்டு  பல தட வைகள் சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17