கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை ; சிவசக்தி ஆனந்தன்

Published By: Digital Desk 4

15 Jul, 2019 | 10:25 PM
image

கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்  50 மில்லியன் ரூபா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்  அதனாலே இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையென வினவிய போதே  இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

உண்மையிலே இரண்டு மாதங்களுக்கு முன்பாக அமைச்சர் கபீர் காசிம்  எனக்கு நேரடியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதாவது வவுனியா மாவட்டத்திலே வீதி புனரமைப்பு செய்ய வேண்டிய முன்னுரிமை அடிப்படையில் வீதி திருத்தம் சம்பந்தமாக விபரங்களைத் தருமாறு கோரி இருந்தார். 

ஆகவே இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கபீர் காசிம் அமைச்சர் எனக்கு மட்டுமல்ல கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியது போல் சிலவேளைகளில் நானும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றேன் என்ற நம்பிக்கையில் அனுப்பினாரோ தெரியவில்லை.

அவர் அனுப்பிய கடிதத்திற்கு நான் இந்த மாவட்டத்திற்கு சில வீதி திருத்தம் செய்ய வேண்டிய சில இடங்களின் விபரங்கள் அனுப்பி இருக்கின்றேன். ஆகவே அது அனுமதிக்கப்படுமா? நிதி வருமா? வராதா? என்பது எனக்கு தெரியாது. இந்த வீதி அமைப்பதற்காக நான் பாதை விபரங்கள் கொடுத்ததற்காக நான் கூட்டமைப்பு அரசாங்கத்தை பாதுகாத்தது போல் எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாக்கிற வேலைக்கு போகவில்லை.

அமைச்சருடைய நிதி கிடைக்குமாக இருந்தால் நான் கொடுக்கப்பட்ட ஒரு சில கிலோ மீற்றர் வீதிகள் திருத்தப்படும் அவ்வளவே என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46