"தமிழர் சிங்களத்தையும் சிங்களவர் தமிழையும் கற்பதால் இனப் பிரச்சினையை ஒழிக்க முடியும்" 

Published By: Vishnu

15 Jul, 2019 | 08:35 PM
image

(செ.தேன்மொழி)

சிங்களவர்கள் தமிழை கற்பதினாலும் தமிழர்கள் சிங்களத்தை கற்பதினாலும் எதிர்காலத்தில் இனப் பிரச்சினையைத் தடுக்கமுடியும் எனத் தெரிவித்த இந்து சமயவிவகார, தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், நான் பௌத்தன், நான் இந்து, நான் முஸ்லிம், நான் கிறிஸ்த்தவன் என்று பெருமைப்படுவதை விட நாங்கள் அனைவரும் இலங்கையர் என்று பெருமை கொள்ளவோமானால் நாட்டில்  இனப்பிரச்சினை இல்லாது போகும் என்றும் குறிப்பிட்டார். 

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் வாதிகளான சம்பந்தன் ,விக்னேஸ்வரன் ஆகியோர் பல கருத்துக்களை முன்வைத்தாலும் அப்பகுதியிலுள்ள பாடசாலைகளில் தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியை கற்பதற்கு விரும்புகின்றனர். அதற்கிணங்க பாடசாலை அதிபர்கள் சகோதர மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பெற்றுதருமாறு எம்மிடம் கேட்கின்றனர். அதேவேளை தெற்கில் சிங்கள அரசியல் வாதிகளான விமல் வீரவன்ச ,உதய கம்மன்பில போன்ற அரசியல் வாதிகள்  என்னதான் கூறுவருகின்ற போதிலும் சிங்கள மாணவர்களுக்கிடையே தமிழ் மொழியை கற்பதற்கான ஆவலை காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை இந்த பாடசாலைகளின் அதிபர்களும் தமிழ் பாடத்தை கற்றுத்தரக் கூடிய ஆசிரிய நியமனங்களை பெற்றுத்தருமாறு எம்மிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு இரண்டாம் மொழியை கற்பிக்க கூடிய ஆசிரிய நியமணங்களை எதிர்பார்க்காமல் நாங்கள் தேசிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்தோம். 

அதற்கமைய தேசிய அலைவரிசையினூடாக சிங்கள தேசிய சேவை , சிங்கள வர்த்தக சேவை , ருஹூணு சேவை, மலையக சேவை , ரஜரட்டை சேவை  இந்த அலைவரிசைகளினூடாக தமிழ் மொழியையும், தமிழ் தேசிய சேவை , பலாலி சேவை , வயம்ப சேவை , பிறை சேவை ஆகிய அலைவரிசைகளினூடாக சிங்களமொழியையும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.  

ஒன்பது சேவைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கும் , கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தெரிவித்திருந்தோம். அதேவேளை 'தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி திட்டத்தினூடாகவும் இந்த கற்பித்தல் நடவடிக்கைகளை எமது அமைச்சினூடாக மேற்கொண்டு வந்தோம்.

இந்த சேவைகள் மூலம் கல்வியைப் பெற்றுக் கொண்டு நாடயாவிய ரீதியில் இரண்டாம் மொழி பரீட்சையில் ' ஏ ' சித்தியைப் பெற்றுள்ள மாணவர்களை பாராட்டும் வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பங்குபற்றலுடன் எமது அமைச்சின் மூலம் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்லிலே 4000 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளதுடன், பாடசாலைகளின் அதிபர் ,ஆசிரியர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வின் போது சிங்களத்திற்கு மொழிப் பெயர்க்கப்பட்ட தமிழ் நாட்டுபுறக் கதைகள் மற்றும் இராமாயணம் புத்தகங்கள் சிங்கள மாணவர்களுக்கும் , தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்ட கம்பெரலிய , மடோல்துவ ஆகிய புத்தகங்களை தமிழ் மாணவர்களுக்கும் வழங்குவதற்கான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமது அமைச்சினூடாக இரண்டாம் மொழியை கற்பிப்பதற்காக 1300 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு எதிர்வரும் வருடம் ஜனவரிமாதம் இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை எமது அமைச்சின் ஊடாக மேற்கொள்வதையிட்டு நான் பெருமை கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22