நுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண்விரயமாக்கப்பட்டது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் விசனம்

Published By: Digital Desk 4

15 Jul, 2019 | 05:45 PM
image

நுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம் வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு போன்ற பிரிவுகள் செயலிழந்துள்ளன. இந்த பிரிவுகள் அனைத்தையும் பழைய வைத்தியசாலை கட்டிடத்திலேயே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசியலுக்காக நோயளர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது உகந்தது அல்ல. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நுவரெலியா கிளையின் உறுப்பினரான வைத்மியர். சமத் லியனகே தெரிவித்தார்.

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டதன் பின்பு கைகளில் கறுப்பு பட்டி அணிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வைத்திய அதிகாரிகள் ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தினர்.

இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

இன்று இடம்பெற்ற நிகழ்விற்கு செலவிடப்பட்ட பணத்தின் மூலம் பாரிய வேலைகள் பலவற்றை செய்திருக்கலாம். ஆனால் இங்கு பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலேயே குறைந்த அளவிலான வைத்தியர்கள் இருக்கின்றனர். அதேபோன்று தாதியர் பற்றாக்குறையும், வைத்திய ஊழியர்களின் குறைபாடும் நிலவுகின்றது. ஆனால் கருத்திற் கொள்ளாமல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு வைத்தியசாலைகளை திறந்து சொட்ப மகிழ்ச்சியடைகின்றார்.

இதன் மூலம் நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அநாவசியமான முறையில் நோயாளர்களை பலிகடாவாக்கி பணத்தை வீண்விரயம் செய்வதினை நாம் கண்டிக்கின்றோம்.

இதனூடாக வைத்தியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனை செய்ய வேண்டாம் என கடிதம் மூலம் பல்வேறு தடவைகள் நாம் உரிய தரப்பினருக்கு அறிவித்தோம். ஆனால் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று நடைபெற்ற இந்த நிகழ்வை அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாம் புறக்கணித்தோம் எனத் தெரிவித்தானர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38