தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில்,

 • அரசு ஊழியர்களுக்கு வீடுகட்ட கடனுதவி ரூ.40 இலட்சமாக உயர்த்தப்படும். 
 • பேறுகால விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும். 
 • பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் இலவச வைஃபை வசதி விரிவுபடுத்தப்படும். 
 • மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ மானியம் வழங்கப்படும். 
 • பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் காலை சிற்றுண்டி சேர்க்கப்படும். 
 • குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும். 
 • தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு பவுனாக உயர்த்தி வழங்கப்படும். 
 • பொங்கலுக்கு கோ-ஆப் டெக்ஸில் துணிகள் வாங்க 500 ரூபாய் மதிப்பிலான கிப்ட் கூப்பன் வழங்கப்படும். 
 • கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 
 • மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். 
 • அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். 
 • பி.ஆர்.அம்பேத்கர் பவுண்டேசன் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும். 
 • முதியோர் உதவித் தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும். 
 • தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும். 
 • புதிய கிரானைட் கொள்கை அமைக்கப்படும்.  
 • வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 இலட்சமாக உயர்த்தப்படும். 
 • நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை மின்சார கட்டணம் கிடையாது. 
 • அரசு கேபிள் பயன்படுத்துவோருக்கு இலவச செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும். 
 • தமிழகத்திற்குள் ஓடும் நதிகள் இணைக்கப்படும். என பல வாக்குறுதிகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • தகவல் : சென்னை அலுவலகம்