வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதலாவது வாக்கெடுப்பு இன்று

02 Dec, 2015 | 08:44 AM
image

தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு மற்றும் செலவு தொடர்பான மேற்படி ஒதுக்கீட்டுச் சட்ட மூலமே இன்று மாலை 5.00 மணிக்கு சபையில் வாக்கெடுப்பு விடப்பட்டு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

2016 ஆத் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது இரண்டாம் வாசிப்பாக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி அன்று முதல் கடந்த எட்டு தினங்களாக வாத விவாதங்கள் இடம்பெற்ற அதேவேளை இன்றைய தினம் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் இடம்பெற்று மாலை 5.00 மணிக்கு சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது.

இதேவேளை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் இன்று பிற்பகல் 3.00 மணியின் பின்னர் கட்டாயமாக சபையில் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த உறுப்பினர்கள் திட்டப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியினர் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜே.வி.பி. திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ள அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படவில்லை. எனினும் விவாதங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சில உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04